வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. சஞ்சீவ் விலகியதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு கிடைத்த வாய்ப்பு

சன் டிவியில் இதுவரை பிரேம் டைமில் ஆக்கிரமித்த ராதிகா சரத்குமார் சில பிரச்சனை காரணமாக சன் டிவியில் இருந்து விலகி கலைஞர் டிவியில் அவருடைய தயாரிப்பில் பொன்னி c/o வாணி என்ற நாடகத்தில் நடித்து வந்தார். ஆனால் இந்த நாடகம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்தவில்லை. இதனால் தற்போது விஜய் டிவியில் இவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் கிழக்கு வாசல் என்ற புத்தம்புது சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறார்.

இந்த சீரியலில் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் முதன்முதலாக சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த சீரியலில் ராதிகா, பூவே பூச்சூடவா சீரியல் கதாநாயகி ரேஷ்மா மற்றும் கதாநாயகனாக சஞ்சீவ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த சீரியலில் முக்கிய பிரபலங்கள் இணைவதால் இதற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது.

Also read: 6 மாத குழந்தையாக நடித்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. பாக்யராஜின் எந்த படம் தெரியுமா?

அதிலும் சஞ்சீவ் ஒரு நாடகத்தில் நடிக்கிறார் என்றால் அந்த நாடகம் கண்டிப்பாக வெற்றியாகவும் அமையும் அதே நேரத்தில் அவருடைய நடிப்பும் யதார்த்தமாகவே இருக்கும். அதனால் அறிவிப்புகள் வெளிவந்த நிலையில் சஞ்சீவ் ரசிகர்கள் இந்த சீரியலை பார்ப்பதற்கு மிக ஆர்வமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது சஞ்சீவ், எஸ் ஏ சந்திரசேகருடன் மணக்கசப்பு ஏற்பட்டதால் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

இவர் விலகியதால் இந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை தேர்வு செய்துள்ளார்கள். அவர் ஏற்கனவே விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் நடித்து அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவருக்காகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தை பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தற்போது மறுபடியும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கி விட்டார்.

Also read: ஜெயித்து விட்டோம் என்ற மமதையில் குணசேகரன்.. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய அப்பத்தா

ஆனால் இதுவரை இவர் கதாநாயகனாக எந்த நாடகத்திலும் நடித்ததே இல்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடித்ததன் மூலம் தான் மிகவும் பரிச்சயமாகவும் பிரபலமாகவும் ஆனார். அதனால் இந்த நாடகத்தின் மூலம் அடுத்த வாய்ப்பை தட்டி சென்று விட்டார் என்று சொல்லலாம். விஜய் டிவியில் கூடிய சீக்கிரம் வர இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் சஞ்சீவிக்கு பதிலாக நடிக்க இருக்கும் அந்த நடிகர் வேறு யாருமில்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் மூர்த்தியின் தம்பியாக நடிக்கும் ஜீவா.

இவர் நடிக்கிறார் என்று உறுதியான நிலையில் இந்த நாடகத்தை பார்ப்பதற்கான எதிர்பார்ப்புகள் இன்னும் கூடுதலாகவே இருக்கிறது. அத்துடன் கிழக்கு வாசல் சீரியலில் நடித்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறார் என்றால் அது உண்மை இல்லை. ஏனென்றால் இவருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் தான். அதனால் எந்த காரணத்துக்காகவும் அதிலிருந்து நான் விலக மாட்டேன் என்று அவரை கூறியிருக்கிறார். இதுவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் மட்டும் பார்த்த இவரை கிழக்கு வாசல் சீரியலில் ஹீரோவாகவும் பார்க்க ஆவலாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: ரவிக்கை இல்ல, முதல் மரியாதை ராதா போல் போட்டோ ஷூட் நடத்திய சுந்தரி.. நெட்டிசன்களை விளாசிய சம்பவம்

- Advertisement -

Trending News