பெத்த தாயாலே ஸ்ரீதேவிக்கு வைக்கப்பட்ட சூனியம்.. சாவு வரை துரத்திய அந்த கேடு கெட்ட பழக்கம்

80 களில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மொத்த இந்திய சினிமாவையும் தன் வசீகரமான நடிப்பால் கட்டிப்போட்டவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் இன்று இவ்வுலகில் இல்லை என்றாலும் பலரது மனதில் கனவுக்கன்னியாக குடிக்கொண்டு வாழ்ந்து வருகிறார். அப்படிப்பட்ட நடிகை ஸ்ரீதேவி தமிழகத்தில் உள்ள சிவகாசி மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

தனது நான்கு வயதிலிருந்து நடிக்க ஆரம்பித்த ஸ்ரீதேவி, தமிழில் கமல், ரஜினி, ஹிந்தியில் அமிதாப்பச்சன், அனில்கபூர் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். அப்படி நடிக்கும் சமயத்தில் ஸ்ரீதேவி மீது பல பிரபலங்கள் காதல் கொண்டு அவரை திருமணம் செய்துக்கொள்ள ஏங்கிய நிகழ்வுகளும் உண்டு. அதிலும் நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை தனது அதிர்ஷ்ட நடிகையாக பாவித்து, அவரை திருமணம் செய்துக்கொள்ள நினைத்தாராம்.

அதேபோல நடிகை ஸ்ரீதேவியும் கமலஹாசனை உருகி, உருகி ஒரு தலையாக காதலித்து வந்தவர். ஆனால் அந்த காதல் கைக்கூடாமல் போகவே ஸ்ரீதேவி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதே சமயத்தில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் ஸ்ரீதேவிக்கு அதிகமாக இருந்ததால் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளிலும் இரவு, பகல் பாராமல் நடித்து வந்தார்.

இந்த சமயத்தில் தான் ஸ்ரீதேவியின் தாயாரான ராஜேஸ்வரி தனது மகள் இப்படி சினிமாவில் உயர்ந்துக்கொண்டே போனால் தன்னை பிரிந்து விடுவாரோ என்ற பயத்தில், ஸ்ரீதேவிக்கே தெரியாமல் ஒரு காரியத்தை செய்துள்ளார். ஸ்ரீதேவி நன்றாக வளர்ந்து வந்த சமயத்தில் சென்னையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டி தனது தாயாருடன் குடிப்பெயர்ந்தார்.

அப்போது ஸ்ரீதேவி படப்பிடிப்பை முடித்துவிட்டு களைப்புடன் வீட்டுக்கு வரும் நேரத்தில், அவரது தாயார் ஸ்ரீதேவி குடிக்கும் ஒயினுடன் சேர்த்து சில மதுபானங்களை கலந்து அவருக்கு கொடுப்பாராம். இதன் காரணமாக போதை தலைக்கேறி வீட்டிலேயே ஸ்ரீதேவி தூங்கி விடுவாராம். இந்த பழக்கம் காலப்போக்கில் ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட, ஸ்ரீதேவியும் மதுவுக்கு அடிமையாகினார்.

இந்த கெட்ட பழக்கம் தான் ஸ்ரீதேவியின் சாவுக்கு கூட வழிவகுத்தது எனலாம். துபாயில் பிரம்மாண்டமான ஹோட்டலின் குளியலறையில் மதுபோதையில் இருந்த ஸ்ரீதேவி, குளிக்கும் தொட்டியில் விழுந்து காலமானார். தற்போது ஸ்ரீதேவியை குடிகாரியாக்கி ரசித்த அவரது அம்மாவை பற்றி பிரபல நடிகையும், ஸ்ரீதேவியின் தோழியுமான குட்டி பத்மினி பேட்டியில் கூறியுள்ளார்.