திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

செல்வராகவன் விக்ரம் கூட்டணியில் கந்தலான தயாரிப்பாளர்.. ஒரு முறை அல்ல 5 முறை கொடுத்த டார்ச்சர்

செல்வராகவன் மற்றும் விக்ரம் இருவரும் தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்தில் இவர்களை இணைத்து படத்தைத் தயாரிக்க ஆசைப்பட்ட ஒரு தயாரிப்பாளர் இருவரையும் இணைத்தார். உடனே படப்பிடிப்பு தொடங்க சிம்லா பக்கத்தில் ஏதோ ஒரு இடத்தில் படப்பிடிப்பு வைக்க வேண்டும் என செல்வராகவன் ஆசைப்பட்டார். அதன்படி தயாரிப்பாளரும் செய்து கொடுத்தார்.

அந்த ஊர் இருக்கு டெல்லியில் இருந்து பஸ் அல்லது ஹெலிகாப்டரில் மட்டுமே பயணம் செய்ய முடியும். விமான நிலையம் கிடையாது. விக்ரம் மற்றும் செல்வராகவன் இருவரும் அங்கு சென்றதும் மது குடிக்க ஆசைப்பட்டுள்ளனர். அங்கு வாங்கி குடித்தனர். ஆனால் அந்த சரக்கு அவர்களுக்கு பிடிக்கவில்லை.

Also Read: தங்கலான் பார்த்து மிரண்டு போன கமல்.. சூர்யாவை தூக்கிவிட்டு விக்ரமை போட்டு உருவாக்கும் வரலாற்று படம்

இதனால் விக்ரம் தயாரிப்பாளருக்கு போன் செய்து இவருக்கு பிடித்த அனைத்தையும் சென்னையிலிருந்து வாங்கி வர சொல்லியுள்ளார். அதன்படியே தயாரிப்பாளர் அனைத்தையும் வாங்கி பார்சல் செய்து அதற்கு ஒரு ஆளை நியமித்து ஃபிளைட்டில் அனுப்பி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் அனுப்பியுள்ளார். இது ஒரு முறைக்கு ஐந்து முறை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

இதிலேயே பல லட்சங்கள் இழந்துள்ளார். ஆனால் அதற்கு கைமாறாக செல்வராகவன் மற்றும் விக்ரம் இருவரும் படப்பிடிப்பை துவங்கியிருக்கலாம். ஆனால் அங்கு படப்பிடிப்பு துவங்கவே இல்லை. அவர்களிடம் தயாரிப்பாளரும் கேள்வி கேட்டால், அதற்கு பதில் இல்லை. இதனால் மனம் நொந்து போன தயாரிப்பாளர் சொல்லாமல் கொள்ளாமல் படத்தை தொடங்காமலேயே அதை நிறுத்திவிட்டு சென்றவர்தான் இன்று வரை சினிமாவை பற்றி தலை காட்டவில்லை.

Also Read: திரிஷா விஷயத்தில் அலர்ட் ஆறுமுகமாயிருக்கும் விக்ரம்.. முத்துன கத்திரிக்காய்க்கும் மவுஸ் குறையல!

ஏன் சினிமாவைப் பற்றி அவர் நினைக்க கூட இல்லை. அந்த அளவிற்கு விக்ரம் தன்னுடைய சேட்டைகளை அந்த தயாரிப்பாளரிடம் காட்டி இருக்கிறார். ஆனால் பலருக்கும் இவர் படிப்படியாக முன்னேறி சினிமாவில் உயர்ந்தவர் என்பதுதான் தெரியும். ஆனால் வளர்ந்த பிறகு அவர் தயாரிப்பாளரை எவ்வளவு டார்ச்சல் செய்துள்ளார் என்பது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் சமீப காலமாக விக்ரம் எந்த அளவிற்கு மோசமானவர் என்று பல பிரபலங்கள் கூறி வந்துள்ளனர். ஒரு மனிதன் வளர வளர அவருக்குள்ளே இருக்கும் நல்லவன் கொஞ்சம் கொஞ்சமாக செத்து விடுவான் போல. அப்படித்தான் விக்ரமும் சினிமாவில் உச்சம் பெற்றதும், அதை வைத்துக் கொண்டு பலரை டார்ச்சர் செய்திருக்கிறார். சிலர் இதனால் சினிமாவை விட்டு தலை தெறித்து ஓடிவிட்டனர்.

Also Read: 500 கோடி லாபத்தை வைத்து கணக்கு போட்ட விக்ரம்.. வசமாக சிக்கிக் கொண்ட தயாரிப்பாளர்

- Advertisement -

Trending News