இன்று வரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனை..100-வது, 200-வது படமும் நடித்த ஒரே ஹீரோ

கோலிவுட்டில் தன்னுடைய திறன் பட்ட நடிப்பால் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர், இன்று வரை தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய எந்த நடிகராகும் அவருடைய சாதனையை முறியடிக்க முடியாத அளவுக்கு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்.

இவருடைய தமிழ் உச்சரிப்பு, நடிக்கும் போது இவரின் கண், உதடு, கண்ணம், புருவம் என அனைத்துமே இவருடைய நடிப்பை பிரதிபலிக்கும். அந்த அளவிற்கு நடிப்பில் ஜாம்பவானாக இருந்த செவாலியர் சிவாஜி கணேசனை மக்கள், ‘நடிகர் திலகம்’, ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என வாயாரப் புகழ்ந்தனர்.

இவர் நடித்த கப்பலோட்டிய தமிழன், ராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல படங்கள் காண்போரின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது. அது மட்டுமல்ல பல உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதா சாகேப் பால்கே போன்ற விருதுகளுக்கும் சொந்தக்காரர்.

சிவாஜி செய்த சாதனைகள் தமிழ் சினிமாவில் நிறைய இருக்கின்றன. அது இன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை. இவருடைய 100வது படமான நவராத்திரி, 200-வது படமான திரிசூலம் போன்ற இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவின் முதல் நூறாவது படத்தை நடித்த முதல் நடிகர் இவர் தான். அதேபோல் 200 படத்தை நடித்த முதல் நடிகரும் இவர்தான். தான் நடித்த இரண்டு படமும் ஒரே நாளில் வெளியிட்ட முதல் நடிகர் இவர் தான். இப்போது பல நடிகர்கள் இதை செய்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கு முன்னோடி சிவாஜி தான். தான் நடித்த இரண்டு படமும் ஒரே நாளில் வந்தது, அதுவும் 17 முறை வந்ததும் குறிப்பிடத்தக்கது. இது இவர் நிகழ்த்திய மாபெரும் சாதனை. இந்த சாதனையை 100 வருட சினிமாவில் இதுவரை யாரும் செய்ய முடியவில்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →