பாலுமகேந்திராவின் வலையில் சிக்கிய 4 நடிகைகள்.. 17 வயதிலேயே பரிதாபமாக உயிரிழந்த நடிகை

திரையில் மிக நுணுக்கமான விஷயங்களை கூட தன்னுடைய கேமராவால் படம் பிடித்து வெளிக்காட்டிய பெருமை பாலு மகேந்திராவுக்கு உண்டு. அது மட்டுமல்லாமல் தான் இயக்கிய திரைப்படங்களில் கூட தன்னுடைய தனி தன்மையை நிரூபித்து காட்டியிருக்கிறார். இப்படி பெரும் ஜாம்பவானாக இருக்கும் இவர் இன்று வரை ஒரு சர்ச்சையான மனிதராகவே இருக்கிறார்.

அதிலும் பெண்கள் விஷயத்தில் இவரை பற்றி ஏகப்பட்ட புகார்கள் இருக்கிறது. அதை எல்லாம் இவர் மறுத்ததும் கிடையாது, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு கோபப்பட்டதும் கிடையாது. அந்த வகையில் இவர் சாதாரண அழகுடன் இருக்கும் நடிகைகளை தன் படத்தில் நடிக்க வைத்து அதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மையை போக்கியிருக்கிறார். அதன் பிறகே அவர்களை தன் வலையில் வீழ்த்துவாராம். அப்படி பாலு மஹிந்திரா உடன் ஒரு எமோஷனல் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நான்கு நடிகைகளை பற்றி காண்போம்.

ஷோபா: சிறு வயதிலேயே நடிக்க வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் இந்த நடிகை. இத்தனைக்கும் அவர் மற்ற ஹீரோயின்களைப் போல சிவந்த நிறம் கிடையாது. பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கும் இவரை இப்போதும் கூட அந்த கால ரசிகர்களால் மறக்க முடியாது. அப்படிப்பட்ட இவர் 17 வயதிலேயே உயிரிழந்தார். இதற்கு பாலு மகேந்திரா தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

அர்ச்சனா: மாநிற அழகியான இவர் பாலு மகேந்திராவின் நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி, வீடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒருமுறை இவரை பேட்டி கண்ட ஒருவர் ஏன் நீங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டிருக்கிறார். அப்போது ஒருவரால் நான் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன், என்னுடைய திரை வாழ்வும் அவரால் பறிபோனது. அதனால் எனக்கு திருமண ஆசையே கிடையாது என்று வருத்தத்துடன் தெரிவித்தாராம். அந்த வகையில் அர்ச்சனா, பாலு மகேந்திராவை தான் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

ஈஸ்வரி ராவ்: இவர் பாலு மகேந்திராவின் ராமன் அப்துல்லா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அப்போதே இவர்கள் இருவரையும் இணைத்து ஏராளமான செய்திகள் வெளிவந்தது. இவரிடம் கூட ஒரு பேட்டியில் பாலு மகேந்திரா குறித்து கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் அதற்கு பதில் சொல்ல விரும்பாமல் நாசுக்காக கடந்துவிட்டார். இதன் மூலம் அவர் இயக்குனர் மீது மிகப்பெரிய வருத்தத்தில் இருப்பது தெளிவாகவே தெரிந்தது.

மௌனிகா: இவர் பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த நெருக்கத்தின் அடிப்படையிலேயே தன்னைவிட 30 வயது அதிகமான இயக்குனரை அவர் திருமணமும் செய்து கொண்டார். இது பரபரப்பை கிளப்பினாலும் இந்த ஜோடி தங்கள் வாழ்க்கையை தங்களுக்காகவே வாழ்ந்தார்கள். ஆனாலும் பாலுமகேந்திராவால் மௌனிகாவின் வாழ்க்கை திசை மாறி போனது என்பதுதான் உண்மை.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →