ஜல்மாரி ஹெலண்டர் இயக்கத்தில் வரலாறு மற்றும் ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் SISU இப்போது தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டொரோன்ட்டா இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டு அனைவரையும் கவர்ந்தது.
அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பின்லாந்தில் வெளியான இந்த திரைப்படம் வரும் 28ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாக இருக்கிறது. அதே போன்று இப்படத்தின் தமிழாக்கம் நம்மூர்களிலும் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே ட்ரெய்லரின் மூலம் மிரட்டிய இப்படம் எப்படி இருக்கிறது என்பதை சிறு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.
Also read: 18 வருடத்திற்கு முன் விஜய்யுடன் லோகேஷ்-க்கு நடிக்க கிடைத்த பட வாய்ப்பு.. தலைகீழாக மாற்றிய இயக்குனர்
கதைப்படி இரண்டாம் உலகப் போரின் முடிவில் படம் ஆரம்பிப்பது போல் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஹிட்லரின் நாஜி படைகளை ரஷ்ய படைகள் போரில் தோற்கடித்து ஓட விடுகிறது. அதிலிருந்து ஆரம்பிக்கும் படம் ஹீரோ தங்க புதையலை கண்டுபிடிப்பதன் மூலம் சூடு பிடிக்கிறது. கடும் உழைப்பின் பயனாக கிடைத்த இந்த புதையலை மக்களுக்கு பிரித்துக் கொடுக்க அவர் நினைக்கிறார்.
அதைத்தொடர்ந்து புதையலை எடுத்துக்கொண்டு வரும் ஹீரோவை நாஜிப்படைகள் தாக்குகிறார்கள். அப்போது எதிரிகளை துவம்சம் செய்யும் ஹீரோவின் பழைய பக்கத்தை அறிந்து கொள்ளும் நாஜிப்படைகள் அவரை அழிக்க நினைக்கிறது. மேலும் அவரிடம் இருக்கும் தங்கத்தையும் ஆட்டைய போட முயற்சி செய்கிறார்கள்.
Also read: கேப்டனுக்கு மட்டுமே பயப்படும் லியோ பட நடிகர்.. அடித்துப் பிடித்து ஓடவிட்ட தருணம்
இந்த தாக்குதலில் என்ன நடந்தது, ஹீரோ வில்லனை ஒழித்துக் கட்டினாரா என்பதுதான் படத்தின் முழு கதை. இப்போது ஹீரோக்கள் அனைவரும் பக்கம் பக்கமாக வசனம் பேசி பஞ்ச் டயலாக்குகள் கூறி கெத்து காட்டி வரும் நிலையில் இப்படத்தின் ஹீரோ பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
அதாவது இப்படத்தில் மொத்தமே அவருக்கு நான்கு வரி வசனம் கூட கிடையாது. படம் முழுவதிலும் தன்னுடைய நடிப்பாலும், ஆக்சன் காட்சிகளாலும் அனைவரையும் மிரட்டி இருக்கிறார். அந்த வகையில் நம்ம ஊரு ஹீரோக்கள் படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். மேலும் படத்தில் நாம் பார்த்து ரசிக்கும் படியாக பல விஷயங்கள் இருந்தாலும் சில லாஜிக் மீறல்களும் இருக்கிறது. அதை தவிர்த்து விட்டால் இப்படம் அனைவரும் கட்டாயமாக பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு நல்ல படைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.