வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
பீரியட் மூவியாக எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு தற்போது தென்காசியை சுற்றி இருக்கும் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் தான் தற்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதாவது மத்தளம் பாறை கிராமத்திற்கு அருகே படப்பிடிப்பை நடத்தி வந்த பட குழுவினருக்கு அங்கு சூட்டிங் நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டுள்ளார்.
Also read: சமீபத்தில் ஹிட் கொடுக்க திணறி வரும் 5 ஹீரோக்கள்.. கும்பலோடு கோவிந்தா போடும் ஜெயம் ரவி
ஏற்கனவே வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் லைட்டுகள் போன்றவற்றால் தொந்தரவு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. அதைத்தொடர்ந்து பட குழுவினருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பட குழுவினர் எந்தவித அனுமதியும் இல்லாமல் மத்தளம் பாறை பகுதியில் சூட்டிங் நடத்தி இருக்கின்றனர். இது குறித்து மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியர் அதிரடியாக படப்பிடிப்புக்கு பேக்கப் சொல்லி இருக்கிறார்.
Also read: விஜயகாந்திடமிருந்து கைநழுவிப்போன 5 வெற்றி படங்கள்.. அய்யாதுரை ஆக நடிக்க இருந்த கேப்டன்
அதையொட்டி ஷூட்டிங் இப்போது இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக தள்ளி போய் இருக்கிறது. இந்த விவகாரம் தான் தற்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே தனுஷ் படத்திற்கு கணக்கிட முடியாத அளவுக்கு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
அதில் தற்போது புது சிக்கலும் முளைத்திருப்பது அவரை கடும் அப்செட்டாக்கி இருக்கிறதாம். ஏனென்றால் இப்படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட பட குழு தயாராகி வரும் நிலையில் இந்தப் பிரச்சனை அவர்களை சோர்வடைய வைத்திருக்கிறார்.
Also read: கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் க்யூல தான் நிக்கணும்.. விஜய், சூர்யாவை காக்க வைக்கும் இயக்குனர்