மே 1, மே 4 சென்டிமென்ட்டாய் நாள் குறித்த அஜித்.. என்ன முடிவு என பயத்தில் தமிழ் திரையுலகம்

துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கான கதை தேர்வு பல குளறுபடிக்குப் பிறகு தற்போது தான் ஒரு தீர்வுக்கு வந்துள்ளது. இதனால் ஏகே 62 படத்தின் சரியான அறிவிப்பு ஜனவரி மாதம் தொடங்கி இன்று வரை வெளிவரவில்லை. இதனால் அஜித் சென்டிமென்ட் ஆக மே மாதத்தை குறி வைத்து இருக்கிறார்.

அன்றைய தினத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ என்று திரையுலகமே பதட்டத்தில் உள்ளது. ஆனால் அதற்கு நேர் மாறாக தல ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏனென்றால் அஜித்தின் ஏகே 62 படத்திற்கான முக்கிய அறிவிப்பு மே 1 தினமான தொழிலாளர் தினத்தில் வெளி வருகிறது.

அதேபோல் மே நான்காம் தேதி வியாழக்கிழமை அஜித்தின் சென்டிமென்ட் முக்கிய நாளான அன்று படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளார். அதிலிருந்து தொடர்ந்து மூன்று கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். எப்படியாவது இந்த தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்று அஜித் முடிவு செய்திருக்கிறார்.

இந்த திடீர் முடிவால் ஏற்கனவே தீபாவளிக்கு வெளிவர இருக்கும் முக்கிய படங்கள் பதட்டத்தில் உள்ளன. தீபாவளிக்கு விஜய்யின் லியோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர், உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 போன்ற பெரிய பெரிய ஜாம்பவான்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து மற்ற படங்கள் வராமல் இருந்தன.

இவர்கள் வேறு தேதியில் அறிவித்ததால், மற்ற ஹீரோக்களின் படம் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அஜித் திடீரென உள்ளே வருவதால் தமிழ் சினிமா நடிகர்கள் என்ன நடக்கப் போகிறதோ! என்ற கலக்கத்தில் உள்ளனர்.

ஏனென்றால் ஏகே 62 படத்தில் அஜித் டிஸிசன்தான் கடைசி முடிவு. நிச்சயம் அந்த முடிவில் தீபாவளி பண்டிகைக்கு ஏகே 62 படம் வெளிவருமா இல்லையா என்பது தெரிந்துவிடும். இருப்பினும் அந்த அறிவிப்பால் தற்போது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்களின் தயாரிப்பாளர்கள் தூக்கம் கெட்டுப் போய் கிடக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல திரையுலகமே அஜித்தின் மே மாத அறிவிப்பைக் குறித்து பதட்டத்துடன் இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →