சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 3டி அனிமேஷனில் 10 மொழிகளுக்கு மேல் உருவாகி வருகிறது. இந்நிலையில் கங்குவா படத்திற்கு முன்பே உருவாக இருந்த படம் தான் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படம் உருவாக உள்ளதாக இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது.
ஆனால் ஒரு சில காரணங்களினால் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இதுகுறித்து இப்போது வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது கொரோனா காலகட்டம் என்பதால் வாடிவாசல் படம் தள்ளிப்போனதாக தாணு கூறியிருந்தார்.
Also Read : முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த 5 ஜோடிகள்.. நிஜத்திலும் ஒன்று சேர்ந்த சூர்யா-ஜோதிகா
ஆனால் அப்போதிலிருந்து வாடிவாசல் படத்தில் இடம்பெறும் காளைகளுக்கான பயிற்சி தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நான் எங்கு சென்றாலும் வாடிவாசல் படத்தை பற்றிய கேள்விதான் கேட்கிறார்கள். இந்த படத்திற்கு இப்படி ஒரு ஹைப் இருக்கும் என்பதை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
மேலும் வாடிவாசல் படத்திற்கான சிஜி வேலைகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருவதாக தாணு கூறியிருந்தார். அதுமட்டுமின்றி வாடிவாசல் படத்தில் இடம்பெற உள்ள காளைகளுக்கான பயிற்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 1.5 கோடி செலவாகி உள்ளதாக தாணு கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
Also Read : கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் க்யூல தான் நிக்கணும்.. விஜய், சூர்யாவை காக்க வைக்கும் இயக்குனர்
அதாவது வாடிவாசல் படத்தில் முக்கிய பங்கு காளை தான். ஜல்லிக்கட்டில் இடம்பெறும் காளைகளை சிறந்த பயிற்சி அளித்து படத்தில் காட்டவுள்ளனர். மேலும் படத்தின் பட்ஜெட்டில் பாதி காளைகளுக்கு செலவு செய்துள்ளனர். சூர்யாவும் இப்படத்திற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.
ஆகையால் வாடிவாசல் படம் ஒரு பிரம்மாண்டத்தின் உச்சம் தொடும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் வெற்றிமாறனின் விடுதலை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் வாடிவாசல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
Also Read : தங்கலான் பார்த்து மிரண்டு போன கமல்.. சூர்யாவை தூக்கிவிட்டு விக்ரமை போட்டு உருவாக்கும் வரலாற்று படம்