வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

2வது திருமணத்தால் வாழ்க்கையை அழித்து கொண்ட 4 நடிகைகள்.. தற்கொலையில் முடிந்த இளம் நடிகையின் உறவு

சினிமா நடிகைகளை பொறுத்த வரைக்கும் பெரும்பாலானோர் தங்களுடைய தொழிலில் எந்த அளவுக்கு உச்சகட்ட புகழை அடைகிறார்களோ , அதே அளவுக்கு சொந்த வாழ்க்கையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறுவதில்லை. சில நடிகைகள் ஏதாவது ஒரு தொழில் அதிபர்களை திருமணம் செய்து கொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்து வாங்கி விடுகிறார்கள். ஒரு சில நடிகைகள் ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும் திருமணம் செய்து வாழ்க்கையில் மிகப் பெரிய ஏமாற்றத்தை அடைகிறார்கள்.

சாவித்திரி: நடிகை சாவித்திரி அந்த காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக பெரும் புகழோடு இருந்தவர். இவர் ஏற்கனவே திருமணம் ஆன நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு குடிப்பழக்கம் வந்ததோடு, சொந்த படம் எடுக்கிறேன் என்ற பெயரில் பல சொத்துக்களையும் இழந்தார். தீராத குடிப்பழக்கத்தால் உடல் நலிவுற்று, உருக்குலைந்து இறந்து போனார் நடிகையர் திலகம் சாவித்திரி.

Also Read:ஷோபாவின் மரணத்திற்கு காரணமான 3 விஷயங்கள்.. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்த பாலு மகேந்திரா

மஞ்சுளா: மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட மஞ்சுளா, ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருந்த நடிகர் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். ஒரு காலகட்டத்தில் விஜயகுமாருக்கு மார்க்கெட் இல்லாத நேரத்தில் இரண்டு குடும்பத்தையும் தனி ஆளாக பார்த்துக்கொண்டு இவர், குடிப்பழக்கத்தால் உயிரிழந்தார்.

ஸ்ரீதேவி: நடிகை ஸ்ரீதேவி, இந்திய சினிமாவின் அழகு பதுமை என்று சொல்லலாம். கமல் மற்றும் ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இவரை திருமணம் செய்து கொள்ள தவமிருந்த நேரத்தில், ஏற்கனவே திருமணமான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில், குளியல் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Also Read:மர்மம் நிறைந்த ‘மூடுபனி’ சோபா மரணம்.. இயக்குனருக்கு சாதகமாக நடந்து கொண்ட எம்ஜிஆர்

ஷோபா: இளம் வயதிலேயே தன்னுடைய சிறந்த நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ஷோபா. இயக்குனர் பாலுமகேந்திராவும், இவரும் காதலித்தனர். பாலு மகேந்திரா ஏற்கனவே திருமணம் ஆனவர், மேலும் ஷோபாவை விட வயது அதிகமுடையவர். இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஷோபா தற்கொலை செய்து கொண்டார். இதுவரை அதற்கான காரணம் தெரியவில்லை.

இந்த நடிகைகள் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்தாலும் அந்த நேரத்தில் யாரை நம்புவது என்று தெரியாமல் இது போன்ற முடிவுகளை எடுத்து, அதன் பின்னர் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் நான்கு பேருடைய மரணமே திடீரென நடந்த ஒன்றுதான். மரணத்திற்கான காரணமும் இன்று வரை யாராலும் சரியாக சொல்ல முடியாமல் தான் இருக்கிறது.

Also Read:மறக்கமுடியாத 7 டாப் நடிகைகளின் தற்கொலை.. புன்னகை மன்னன் பாணியில் மரணித்த ப்ரத்யூக்‌ஷா

- Advertisement -

Trending News