தமிழ் சினிமாவில் பல படங்களில் தன்னுடைய நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் சில நடிகைகள் போராடி வருகிறார்கள். சில நடிகைகள் பல வருஷமாக சினிமாவில் இருந்தாலும் அவர்களின் திறமை மறைக்கப்பட்டு தான் இருக்கிறது. அந்த நடிகைகள் யார் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ்: இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான படம் தான் ரம்மி. இந்த படத்திற்கு முன்னதாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அது எதுவும் அங்கீகரிக்கப்படாத கேரக்டர்கள். ரம்மி படத்திற்கு பின்பு பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, மனிதன் தர்மதுரை, வடசென்னை, கனா, சாமி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் என்னதான் விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்று சில பெரிய ஹீரோக்களிடம் நடித்திருந்தாலும் இவருக்கான சரியான இடத்தை தமிழ் சினிமா கொடுக்க மறந்து விட்டது என்றே சொல்லலாம்.
பிரியாமணி: இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன், மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். பிரியாமணி என்று சொன்னாலே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது பருத்திவீரன் படத்தில் இவருடைய நடிப்பு தான். இந்த படத்தில் இவருடைய நடிப்புக்காக நேஷனல் அவார்டு வாங்கி இருக்கிறார். ஆனாலும் இவருக்கு தமிழ் சினிமா முறையான அங்கீகாரம் கொடுக்கவில்லை.
ஸ்ரீதிவ்யா: இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இவர் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். இதைத்தொடர்ந்து ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி, மருது போன்ற படங்களில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். ஆனாலும் சினிமாவில் இவருக்கான வாய்ப்புகள் சரியாக அமையாமல் போய்விட்டது.
Also read: அஞ்சலியை தொடர்ந்து ராம் படத்தில் நடிக்கும் காமெடி நடிகர்.. யாரும் எதிர்பார்க்காத கூட்டணி
சாய் தன்ஷிகா: இவர் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் பேராண்மை படத்தின் மூலம் பரிச்சயமானார். இதற்குப் பிறகு மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, கபாலி, காத்தாடி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த பரதேசி படத்தின் நடிப்பையும் சரி கபாலி படத்தில் நடித்த நடிப்பையும் யாராலும் மறக்க முடியாது. அத்துடன் அந்த படங்களுக்காக இவர் பிலிம் பேர் சிறந்த துணை நடிகைக்கான விருதை வாங்கி இருக்கிறார். ஆனாலும் இப்படிப்பட்ட திறமையான நடிகையை தமிழ் சினிமா கொண்டாட மறந்துவிட்டது.
அஞ்சலி: இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பிலிம் பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றிருக்கிறார். இவர் எப்பொழுதுமே இவருக்கு கொடுத்த கேரக்டரில் வாழ்ந்து நடித்துக் காட்டுவார். இதற்குப் பின் அங்காடி தெரு படத்தில் இவருடைய நடிப்புக்காக தமிழ்நாடு மாநில விருதையும் சிறந்த நடிகைக்காக பெற்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து சினிமாவிற்கு வந்து 13 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தான் இருக்கிறார்.