திருமணம் ஆனதிலிருந்தே நம்பர் நடிகையை சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகள் கட்டம் கட்டிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அவர் சர்ச்சைகளின் ராணி தான். ஆனால் இப்போது கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என்ற ரேஞ்சுக்கு அவர் இருக்கிறார்.
அதிலும் சமீபத்தில் டாப் ஹீரோ ஒருவரிடம் தோற்றுப் போய் நிற்கும் அவர் வேர்ல்ட் ஹீரோவிடமும் மூக்குடைப்பட்டிருக்கிறார். அதாவது நம்பர் ஒன் என்ற மிதப்பில் கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் ஆடிய நடிகை தன் கணவரை வைத்து ஏகப்பட்ட திட்டம் போட்டார்.
ஆனால் அது எதுவுமே ஒர்க்அவுட் ஆகாத நிலையில் தோஷம், பரிகாரம் என ஆன்மீக பயணமும் மேற்கொண்டார். அப்போது நடிகை நடந்து கொண்ட முறை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் இனிமேல் நமக்கு நல்ல நேரம் தான் என்று குஷியாக வந்த நடிகைக்கு செம ஆப்பு ஒன்று கிடைத்திருக்கிறது.
அதாவது டாப் இயக்குனரின் அடுத்த படத்திற்காக அவரிடம் நேரடியாகவே வாய்ப்பு கேட்ட நடிகைக்கு எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று கிடைத்திருக்கிறது. இயக்குனருக்கு நடிகையை வைத்து படம் இயக்குவதற்கு விருப்பம் இருந்திருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தை ஹீரோவிடம் எடுத்துச் சென்றபோது அவர் முடியாது என்று கூறிவிட்டாராம்.
Also read: அரைகுறை ஆடையில் போட்டோ சூட் நடத்தும் குத்துவிளக்கு.. இயக்குனரை நம்பி மோசம் போனதால் வந்த வினை
ஏனென்றால் நடிகை சூப்பர் நடிகருடன் நடித்த சமயத்தில் தன் படத்தில் நடிக்க வேண்டும் என்று வேர்ல்ட் ஹீரோ கேட்டிருக்கிறார். ஆனால் அப்போது நடிகை முடியாது என்று மறுத்து விட்டாராம். அதாவது நடிகரின் படத்தில் நெருக்கமாக நடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
அந்த அவமானத்தை மனதில் இத்தனை வருடங்களாக தேக்கி வைத்திருக்கும் நடிகர் சரியான சமயம் பார்த்து நடிகையின் மூக்கில் குத்தி இருக்கிறார். இப்படி திரும்பும் பக்கமெல்லாம் விடாத இந்த ஏழரையால் நம்பர் நடிகையின் பாடு இப்போது திண்டாட்டமாகி போயிருக்கிறது.
Also read: 60 வயதில் இளம் பெண்ணை மூன்றாவது திருமணம் செய்த பிரபலம்.. வாரிசு இல்லாததால் தனிமையில் வாடும் நடிகை