ருத்ர தாண்டவத்திற்கு தயாரான விஜய் ஆண்டனி.. பட்டையை கிளப்பும் பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர்

நடிகராக களம் இறங்கிய விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் திரைப்படம் மிகப் பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் அவை அனைத்தும் கவனம் இருக்கவில்லை. அதனாலேயே அவர் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் பரிமாணம் எடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே இந்த திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து நான்கு நிமிட காட்சிகளை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தனர். அதில் மருத்துவ துறைக்கு சவால் விடும் வகையில் மூளை மாற்று அறுவை சிகிச்சை பற்றி காட்டியிருந்தனர்.

Also read: உச்சகட்ட மன உளைச்சலில் இருக்கும் விஜய் ஆண்டனி.. சதியால் பல லட்சம் நஷ்டம் என புலம்பல்

இதுவே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து பட குழு தற்போது இதன் ட்ரெய்லரை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் ட்ரெய்லரின் ஆரம்பமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதை தொடர்ந்து அதிர வைக்கும் பின்னணி இசையும், யூகிக்க முடியாத காட்சிகளும் வேற லெவலில் இருக்கிறது.

விஜய குருமூர்த்தியின் கொலை வழக்கு, அதற்கு காரணமான சத்யாவின் கைது என விரியும் காட்சிகளில் பல ட்விஸ்ட்டுகள் இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனியின் மாறுபட்ட ருத்ரதாண்டவத்தை இப்படத்தில் நாம் காணலாம்.

Also read: தமிழ் புத்தாண்டை குறிவைத்து ரிலீஸ் ஆகும் 5 படங்கள்.. பிச்சைக்காரன் 2-வை டீலில் விட்ட விஜய் ஆண்டனி

அந்த அளவுக்கு இந்த ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சிகளும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. வரும் மே 19ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் முதல் பாகத்தை விடவும் அதிக அளவில் ரசிகர்களை கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.