சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சினிமாவில் குரு என்றால் அது இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் தான். ஆனால் ரஜினியை சூப்பர் ஸ்டாராய் செதுக்கியத்தில் மற்றுமொரு மிகப்பெரிய பங்கு இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு தான் உண்டு. இவருடைய இயக்கத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினி நடித்திருக்கிறார். இறுதியாக 1992 ஆம் ஆண்டு பாண்டியன் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். இந்த இருவரது கூட்டணியில் வெளியான 24 படங்களில் ரஜினிக்கு 6 படங்கள் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தன.
முரட்டுக் காளை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் முரட்டுக்காளை. 1980 இல் ரிலீசான இந்த படம் ரஜினியை ஒரு ஆக்சன் ஹீரோவாகவும், சூப்பர் ஸ்டார் ஆகவும் தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தியது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை போல் இத்தனை வருடத்தில் எந்த ஒரு படத்திற்கும் கிடைத்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் ரஜினியின் அறிமுக பாடலாக வரும் பொதுவாக என் மனசு தங்கம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
நெற்றிக்கண்: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் யாரும் இந்த படத்தில் வரும் சக்கரவர்த்தி என்னும் கேரக்டரை ஏற்று நடிக்க தயங்குவார்கள். ஆனால் ரஜினி இப்படி ஒரு வித்தியாசமான நெகட்டிவ் கேரக்டரை அவருக்கே உரிய ஸ்டைலிலும், காமெடியிலும் பட்டையைக் கிளப்பி இருந்தார். கொஞ்சம் கூட படம் பார்க்கும் யாரும் முகம் சுளிக்காத அளவிற்கு அந்த கேரக்டரை ரஜினியால் மட்டுமே அப்படி பண்ணி இருக்க முடியும். இந்த படம் ரஜினியின் சினிமா வளர்ச்சியை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றது.
மிஸ்டர் பாரத்: சத்யராஜ் தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக கிடுகிடு என வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் அவரை ரஜினிக்கு வில்லன் ஆக்கினார் இயக்குனர் முத்துராமன். யார் ஹீரோ என்று ரசிகர்கள் திணரும்படி இருவரும் படத்தில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அந்த படத்தில் ரஜினிக்கு ஏற்ற வில்லனாக சத்யராஜ் மட்டுமே நடித்திருக்க முடியும். ரஜினியும் எந்தவித காழ்புணர்ச்சியும் இல்லாமல் சத்யராஜை நடிக்க விட்டிருப்பார்.
தர்மத்தின் தலைவன்: 1988ல் ரஜினிகாந்த், பிரபு, சுஹாசினி, குஷ்பூ, நாசர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு உருவான படம் தர்மத்தின் தலைவன். இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். நல்ல குடும்பப் பின்னணி கதையை கொண்ட இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
Also Read:வடிவேலை விட இவரைத்தான் ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை படாத பாடு படுத்திய நடிகர்
நல்லவனுக்கு நல்லவன்: ரஜினிகாந்த் மற்றும் ராதிகா நடிப்பில் 1984 இல் வெளியான படம் நல்லவனுக்கு நல்லவன். இந்த படத்தில் ரஜினி ஒரு ஆக்சன் ஹீரோவாகவும், கிளைமாக்ஸ்சிற்கு முந்தைய காட்சிகளில் வயதான கேரக்டரிலும் நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக், ரஜினிக்கு வில்லனாக நடித்திருப்பார்.
குரு சிஷ்யன்: ரஜினிகாந்த் மற்றும் பிரபு கூட்டணியில் இயக்குனர் முத்துராமன் இயக்கிய திரைப்படம் தான் குரு சிஷ்யன். இந்த படத்தில் ஆக்சனுக்கும், காமெடி காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. கௌதமி, சீதா, வினு சக்கரவர்த்தி, மனோரமா போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்த இந்த படம் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
Also Read:இனி என் அகராதியில் தோல்விக்கே இடம் கிடையாது.. பிளாப் படத்திற்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் ரஜினி