திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

கோவை சரளாவை ஓவர்டெக் செய்ய வரும் நடிகை.. ஹீரோயின் சப்ஜெக்ட்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் அறம் இயக்குனர்

கோவை சரளா 80, 90களில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியில் கலக்கிக் கொண்டு ஆல் ரவுண்டராக வலம் வந்தார். ஆச்சி மனோரமாக்கு பிறகு காமெடியில் அதிக பெயர் எடுத்து அவரைப் போல மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதிலும் இவருடைய காம்போவில் வடிவேல் நடித்தால் அந்த படம் செம ஹிட் ஆகும். அத்துடன் இவருடைய நகைச்சுவை படங்களை பார்த்தால் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு காமெடியே கொடுப்பதில் மிகப்பெரிய கில்லாடி.

இப்படி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் வெளிவந்த செம்பி படத்தின் மூலம் இவருடைய ஆக்ரோஷமான ஆக்சன் நடிப்பையும் வெளிக்காட்டி இருப்பார். அத்துடன் இவ்வளவு சீரியஸான கேரக்டரிலும் என்னால் நடிக்க முடியும் என்று நடித்துக் காட்டி இருப்பார். இப்படிப்பட்ட இவரை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு மற்றொரு நடிகை ஹீரோயின் சப்ஜெக்ட்க்கு களம் இறங்குகிறார்.

Also read: அஜித், விஜய் உச்சத்தில் இருக்க இதுதான் காரணம்.. அவர்களை வியந்து பார்த்த கோவை சரளா

அதாவது இயக்குனர் கோபி நயினார் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை மட்டும் தான் தொடர்ந்து இயக்கிக் கொண்டு வருகிறார். இவர் நயன்தாராவை வைத்து அறம் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் நயன்தாராவுக்கு வேறுபட்ட கேரக்டரை கொடுத்து அதிலும் வெற்றி பெற்று ரசிகர்களிடமிருந்து வரவேற்பு பெற்றார். அதேபோல் இவர் ஆண்ட்ரியாவை வைத்து மனுசி என்ற படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மற்றொரு கதையும் ரெடி பண்ணி அந்தப் படத்தையும் ஹீரோயின் சப்ஜெக்டாக கொண்டு போவதற்காக முக்கியமான நடிகையை தேர்வு செய்திருக்கிறார். அந்த நடிகை வேறு யாருமில்லை ராதிகா தான். ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது வரும் படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.

Also read: சினிமாவை தாண்டி பிசினஸில் கல்லா கட்டும் நயன்தாரா.. ஒரு வருடத்திற்கு இவ்வளவு கோடிகளில் வருமானமா?

இப்படிப்பட்ட நேரத்தில் இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதை அமைந்து இருக்கிறது. அத்துடன் இவருடன் மலையாள நடிகர் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவர் சண்டை கோழி, சீமராஜா, கர்ணன், சுல்தான் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். முக்கியமாக தமிழ் படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

மேலும் இப்படம் ஆர்டிஸ்ட் க்கு முக்கியத்துவம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவமாக இருக்கும் என்று குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்படத்தினை ஆரம்பிப்பதற்கு பூஜைகள் போட்டு தொடங்கி விட்டார்கள். தொடர்ந்து இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது.

Also read: துவண்டு போன ரசிகர்களை குஜால் படுத்த ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 நடிகைகள்.. சமந்தாவின் அந்த டான்ஸ் மறக்க முடியுமா

- Advertisement -

Trending News