தற்போது மிகவும் ட்ரெண்டிங்காக இருப்பது கொஞ்சம் வருடங்களுக்கு முன்னதாக வந்த படங்களை எடுத்து அதனுடைய பார்ட் 2 என்று தொடர்ச்சியாக படங்களை எடுப்பதுதான். அதிலும் சூர்யாவை இந்த விஷயத்தில் அடிச்சிக்கவே முடியாது என்றே சொல்லலாம். ஏனென்றால் சிங்கம் 1,2,,3 என்று தொடர்ச்சியாக நடித்துக் கொண்டே வருகிறார். இவருக்கு போட்டியாகவே லாரன்ஸும் காஞ்சனா படத்தை ஒவ்வொரு பாகமாக வெளியிட்டு வருகிறார்.
இப்படி இருக்கையில் 90களில் ஹிட் ஆகி மிக வரவேற்பை ஏற்படுத்திய படங்களை எடுத்து அதனுடைய பார்ட் 2 ஆக வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். அதனால் 90ஸ் ஃபேவரிட் ஆன படத்தை பார்ட் 2வாக நடித்து வெளியிடலாம் என்று சரத்குமார் கூறி இருக்கிறார். இதனால் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அறிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட வெற்றி படமான 1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் சூரியவம்சம். இந்தப் படத்தை தான் இரண்டாம் பாகமாக உருவாகப் போகிறது. இதில் தந்தை மகன் என இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்தார். அன்றைய காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் இன்று வரை ஒரு கிளாசிக் படமாக இருந்து வருகிறது.
இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி தயாரித்து இந்த படத்திற்கு எஸ்ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். முக்கியமாக சரத்குமார் ரெண்டு வேடத்தில் நடிக்கும் போது 90ஸ் கிட்ஸ் அனைவரும் உண்மையில் 2 பேர் இந்த மாதிரி இருந்து தான் நடிக்கிறாங்களா இப்படி எல்லாம் இருப்பாங்களா என்று யோசிக்க வைத்த படங்களில் ஒன்று சூரிய வம்சம்.
அது மட்டுமா ஒரே பாட்டால் பணக்காரங்களாகவும் ஆகிவிடலாம், கலெக்டராகவும் ஆகிவிடலாம் என்று 90ஸ் கிட்ஸை நம்ப வைத்த படமும் இதுதான். இப்படி 90ஸ்க்கு பேவரைட் ஆன படத்தை மறுபடியும் பார்க்கப் போகிறோம் என்பது நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. அது ஒரு காலம் வசந்த காலம் என்று சொல்வது போல இதைக் கேட்டதுமே அந்த ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது. அதிலும் சின்ராசு கேரக்டரை நம்மளால் மறக்க முடியுமா.
இப்பொழுது கூட இதில் வருகிற ஒரு சீன் மிகவும் ட்ரெண்டாகி வந்தது. அதாவது குடும்பத்துடன் போட்டோ எடுக்கும் போது ராதிகா ஏனுங்க சின்ராசு என்று சொல்ல அதற்கு சரத்குமார் என்ற குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லாரும் வந்துட்டாங்க நீங்க போட்டோ எடுங்க. இந்த மாதிரி இந்த படத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு சுவாரஸ்யமான விசயங்கள் இருக்கிறது. அத்துடன் இப்படம் கூடிய சீக்கிரத்தில் ஆரம்பித்து அதற்கான அப்டேட்டுகள் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.