திரையில் அழகு பதுமைகளாக வரும் ஹீரோயின்கள் பலருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு சந்தோஷமாக அமைவது கிடையாது. அப்படித்தான் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒருவர் தன் சொந்த அம்மா மற்றும் தங்கையாலேயே ஏமாற்றப்பட்டு இருக்கிறார்.
ஆரம்பத்தில் வாய்ப்புகளுக்காக கஷ்டப்பட்டு வந்த அந்த நடிகை தன் பெற்றவர்களின் வற்புறுத்தல் காரணமாகவே சில அட்ஜஸ்ட்மென்ட்டுகளை செய்து முன்னேறினார். அதைத்தொடர்ந்து அவர் சம்பாதிக்கும் ஒட்டுமொத்த பணத்தையும் அவரின் குடும்பமே உல்லாசமாக அனுபவித்து வந்தது.
Also read: டிரான்ஸ்பரென்ட் உடையில் வந்த நடிகை.. எம்ஜிஆர் செய்த காரியம்
அதிலும் அவருக்கு சொந்தமான வீட்டையே தந்திரம் செய்து நடிகையின் அம்மாவும், தங்கையும் ஆட்டையை போட்டு இருக்கிறார்கள். இதனால் சுதாரித்துக் கொண்ட நடிகை தான் சம்பாதிக்கும் பணத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ள முடியாத அவரின் அம்மா நடிகையை நடுராத்திரி என்றும் பாராமல் வீட்டை விட்டே துரத்தி இருக்கிறார்.
இதனால் நடிகை மனதளவில் ரொம்பவும் நொந்து போயிருக்கிறார். ஏனென்றால் தன் குடும்பத்திற்காகவே கணவரை பிரிந்து வந்தார் அந்த நடிகை. தற்போது தன்னை அட்டைப்பூச்சி போல் உறிந்த குடும்பத்தாரின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட நடிகை மீண்டும் கணவரிடமே சரணடைந்திருக்கிறார்.
Also read: தயாரிப்பாளரை ஏமாற்றி இயக்குனர் செய்த அட்ஜஸ்ட்மெண்ட் வேலை.. பழிகாடான குடும்ப குத்து விளக்கு நடிகை
அதன் பிறகு சிறப்பான வாழ்க்கை நடத்தி வந்த நடிகைக்கு பேரிடியாக அமைந்தது கணவருடைய மரணம். அந்த இழப்பிலிருந்து மீண்டு வந்த நடிகை தன் மகளுக்காகவே மீண்டும் சினிமாவில் அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதிலும் இப்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் நடிகைக்கு சமீப காலமாக ஞாபக மறதி நோய் அதிகமாகி விட்டதாம்.
தான் நடிக்கும் படங்களின் வசனத்தை கூட சரியாக சொல்ல முடியாத அளவுக்கு இந்த மறதி அவரை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது. இருப்பினும் குடும்பத்துக்காகவே மெழுகுவர்த்தியாய் கரைந்து போன இந்த நடிகை விரைவில் இந்த பாதிப்பில் இருந்து வெளிவர வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் ஆதங்கத்தோடு கூறி வருகின்றனர்.
Also read: அர்த்த ராத்திரியில் நடிகையை தேடி வரும் நடிகர்.. எல்லை மீறிய அந்தரங்க உறவால் பதறிய அம்மா