வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன் எல்லாம் வேஸ்ட்டாம்.. 6 தரமான படங்களை தேர்வு செய்த ப்ளூ சட்டை

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனல் மூலம் படங்களை விமர்சனம் செய்து வருகிறார். பெரும்பாலான ரசிகர்கள் இவருடைய விமர்சனத்தை பார்த்து விட்டு தான் படங்களை பார்க்க தியேட்டருக்கு செல்கின்றனர். ஆனாலும் சில நல்ல படங்களையும் ப்ளூ சட்டை மாறன் மோசமாக விமர்சித்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னால் முடியும் அளவுக்கு வச்சி செய்து இருந்தார். மணிரத்னம் முதல் ஐஸ்வர்யா ராய் வரை பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் கழுவி ஊற்றி இருந்தார். இந்நிலையில் 2023 தொடங்கி கிட்டதட்ட நான்கு மாதங்கள் ஆகியுள்ளது.

ஆகையால் இதுவரை தமிழ் சினிமாவில் 60 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் ப்ளூ சட்டை மாறன் சிறந்த படங்களை வரிசைப்படுத்தி உள்ளார். அந்த லிஸ்டில் அதிகம் வசூல் செய்த துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன் போன்ற டாப் நடிகர்களின் படங்கள் எதுவுமே இடம்பெறவில்லை.

அதில் முதலாவதாக பிக் பாஸ் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தை குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களிடமும் டாடா படத்திற்கு நல்ல வரவேற்பு தான் கிடைத்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படத்தை பட்டியலில் செய்துள்ளார்.

அயோத்தி படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார். அயோத்தி படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை படமும் சிறந்த படம் என மாறன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக நடுநிலையான படங்கள் என்ற வரிசையில் அயலி, கொன்றால் பாவம் மற்றும் யாத்திசை போன்ற படங்கள் ப்ளூ சட்டை மாறன் பட்டியலிட்டுள்ளார். இந்த வருடம் வெளியான 60 படங்களில் இந்த ஆறு படங்கள் மட்டுமே நல்ல படங்களாக வந்துள்ளது என ப்ளூ சட்டை மாறன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

blue-sattai-maran
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →