காமெடி மற்றும் குணச்சித்திரம் ஆகிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் மனோபாலா. இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டுள்ளார். இந்நிலையில் மனோபாலாவிற்கு தற்போது 69 வயது ஆகிறது.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக மனோபாலா தனது திரைப்பயணத்தை தொடங்கினார். மேலும் இப்போது வரை கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் மனோபாலா இயக்கியுள்ளார். அதேபோல் நிறைய புதுமுக இயக்குனர்களுக்கும் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பளித்து உள்ளார்.
Also Read : மனோபாலா கொடுத்த தரமான 5 படங்கள்.. விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்த இரண்டு படங்கள்
மேலும் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி அதில் சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்தும் வந்தார். இப்படி ஓய்வில்லாமல் சினிமாவை சுற்றியே அவரது வாழ்க்கை அமைந்தது. மனோபாலா சில காலமாகவே கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வந்தார்.
இந்த சூழலில் திடீரென மனோபாலாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மனோபாலா, மருத்துவம் பயனளிக்காத நிலையில் இன்று காலமானார்.இந்த செய்தி அவரது ரசிகர்கள் மட்டுமன்றி திரைத்துறையினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் மனோபாலாவின் இறப்பிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவருடைய இறப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது நண்பனை இழந்து விட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கலை தெரிவித்துள்ளார். அதேபோல் சூர்யா, இயக்குனர் வெங்கட் பிரபு போன்றோர் தங்களது இரங்கலை பதிவிட்டுள்ளனர்.
Also Read : மயில்சாமியின் உடலை பார்க்க கூட எனக்கு தைரியம் இல்ல.. இறப்பிற்கான காரணத்தை கூறிய மனோபாலா