திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பல கோடி மதிப்பிலான லம்போர்கினி காரை வைத்திருக்கும் 5 சினிமா பிரபலங்கள்.. பைக் போல அதிக கிரஷில் இருக்கும் அஜித்

பொதுவாக சினிமா பிரபலங்களாக இருக்கும் அவர்கள் கெத்துக்காகவே விலை உயர்ந்த காரை வாங்க வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் தற்போது அதிக விற்பனையாகிக் கொண்டிருப்பது லம்போர்கினி கார் தான். இந்த காரை பயன்படுத்தும் சினிமா பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.

ஆர்.கே: உலகின் அதிவேக மாடல் காராக கருதப்படும் லம்போர்கினி ஹல்லர்டோ காரை நடிகர் ஆர்.கே. வாங்கியுள்ளார். இவர் வில்லுப்பாட்டுக்காரன், மணிக்குயில், கட்டப்பஞ்சாயத்து, எல்லாம் அவன் செயல், ஜில்லா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் ரசிகர்களிடம் மட்டும் இவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், உலகின் அதிவேக மாடலாக கருதப்படும் லம்போர்கினி ஹல்லர்டோ எல்பி550-2 மாடல் காரை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த வகை மாடல் கார்கள் இந்தியாவில் பெரும்பாலும் ஒரு சில வகை தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஃபாஸ்ட் லக்சூரி காரின் மதிப்பு மட்டும் ரூ.3.06 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஜெட் வேகத்தில் படங்களை முடிக்கும் பகத் பாசில்.. ஒரு கெட்டப்புக்காக இவ்வளவு போராட்டமா?

பிரிதிவிராஜ்: மலையாள நடிகர்களுக்கு பொதுவாகவே காரின் மீது அதிக ஈர்ப்பு இருக்கும். அந்த வகையில் லம்போனி காரை பயன்படுத்தும் பிரிதிவிராஜ் ஸ்போர்ட்ஸ் காரின் ரியர் வீல் டிரைவ் பதிப்பான நீரோ அல்டெபரான் (பளபளப்பான கருப்பு) நிற லம்போர்கினி ஹுராகன் எல்பி 560-2ஐ நடிகர் 2018 இல் வாங்கினார்.

பகத் பாசில்: தென்னிந்திய நடிகர் பகத் பாஸில் புத்தம் புதிய லம்போர்கினி காரை எடுத்துள்ளார். அந்த கார் கலரான லைட் க்ரீன், போர்ஷே 911 கரேரா எஸ் ஐயும் வைத்திருக்கிறார். ஐகானிக் போர்ஷே 911 கரேரா பயன்படுத்தி வருகிறார்.

Also read: அஜித்துக்கு தலைவலி கொடுத்த 5 படங்கள்.. தயாரிப்பாளர் செய்த துரோகத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம்

ஹாரிஸ் ஜெயராஜ்: தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கு ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். நாட்டிலேயே லம்போனி கார் வைத்திருக்கும் ஒரே இசைக்கலைஞர் இவர் தான். இவருடைய கார் பியான்கோ மோனோசெரஸ் (வெள்ளை) மற்றும் நீரோ ஆல்டெபரான் (பளபளப்பான கருப்பு) ஆகியவற்றின் நிறத்தைக் கொண்டுள்ளது.

அஜித்: இவர் குடும்பத்திற்கு அடுத்ததாக அதிக அளவில் நேசிக்க கூடியது பைக் மற்றும் கார் தான். இவருக்கு தெரியாத எந்தக் காரும் கிடையாது என்றே சொல்லலாம். இவர் தற்போது எந்த கார் ரேசிலும் பங்கேற்காமல் படங்களில் நடிப்பதில் மிக கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் இவருக்கு கார் மேல இருக்கும் மோகம் மட்டும் குறையவே இல்லை. அதன் விளைவாகத்தான் உலகிலே மிக உயர்வான லம்போனி கார் வாங்கி இருக்கிறார். இவர் வைத்திருக்கும் காரின் மதிப்பு 34 கோடி மதிப்பிலானது.

Also read: ‘ராஜா’ படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த மாமி நடிகையின் தற்போதைய புகைப்படம் .. என்னது கணவர் பெரிய பிளாப் நடிகரா !

Trending News