சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஓவராக ஆட்டம் போட்டு கொண்டிருப்பது ராதிகா. அதிலும் ஒருத்தரை விடாமல் அனைவரையும் டார்ச்சர் செய்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லலாம். முக்கியமாக கோபி, இவரை கல்யாணம் பண்ணிக்கொண்டு படாத பாடுதான் பட்டு வருகிறார். இவரை விட்டு விலகவும் முடியாமல் இவருடன் சேரவும் முடியாமல் ஒவ்வொரு நாளும் நரக வேதனை தான் அனுபவித்து வருகிறார்.

ராதிகா இப்படி செய்வதற்கு காரணம் கோபி எங்கே நம்மளை விட்டு மறுபடியும் பாக்கியா வேணும் என்று அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து விடுவாரோ என்று பயத்தின் வெளிப்பாடு தான் இவரை இந்த அளவுக்கு செய்ய வைக்கிறது. அத்துடன் பாக்கியா வேலை செய்யும் கேண்டினில் சென்று குத்தம் கண்டுபிடித்து ஒவ்வொரு நாளும் அடாவடித்தனம் தான் பண்ணிக்கிட்டு இருக்கிறார்.

Also read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

இதற்கிடையில் இவர் வீட்டில் செய்யும் அக்கப்போர் தாங்க முடியாமல் கோபி வீட்டில் அனைவரும் ராதிகா மேல் அதிக கடுப்பாகி இருக்கிறார்கள். ராதிகாவை எப்படியாவது வெளியே அனுப்பி விட வேண்டும் என்று ஈஸ்வரி முடிவோடு இருக்கிறார். ஆனாலும் அப்ப கூட கோபி நம்ம கூடயே இருந்துருனும் ராதிகா மட்டும்தான் வெளிய போகணும் என்று நினைக்கிறார்.

இதற்கிடையில் இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களை மிகவும் கவரக்கூடிய ஒரு கேரக்டர் என்றால் அது ஜெனிதான். இவருடைய எதார்த்தமான நடிப்புக்கும் பாக்யாவிற்கு எப்போதும் துணையாக இருப்பதும் அனைவரையும் கவர்ந்தார். பாக்யாவிற்காக செழியன் இடமும் சண்டை போட்டு எந்த காரணத்திற்காகவும் யாருக்காகவும் மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பேசுவது தான் இவருடைய நடிப்புக்கு கிடைத்த பாராட்டு.

Also read: ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல்.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்

ஆனால் தற்போது பாக்கியா வீட்டில் யாரும் இல்லாத போது படியிலிருந்து வரும் பொழுது கீழே கால் வலிக்கு விழுகிறார். அப்பொழுது ராதிகா மட்டும்தான் வீட்டில் இருப்பதால் அவர் இதை பார்த்து மிகவும் ஷாக் ஆகி ஜெனியே ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருகிறார். பிறகு அட்மிட் செய்தவுடன் பாக்யாவிற்கு போன் பண்ணி நான் ஒரு விஷயம் சொல்றேன் நீங்க அதைக் கேட்டு ஷாக் ஆகாதீங்க என்று ஜெனிக்கு நடந்த விஷயத்தை சொல்கிறார்.

ஆனால் இந்த சீன் தான் விஜய் டிவியில் தொடர்ந்து எல்லா சீரியலிலும் வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா, தமிழன் சரஸ்வதி வசு தற்போது இதிலும் அதே சீனை கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு வேற கதையை இல்லன்னா இந்த மாதிரி ஒரு கதையை வைத்து உருட்டுறாங்க. ஆனால் இதைக் கூட சுயமாக யோசிக்காமல் சன் டிவியில் வந்த சீன வைத்து இவர்கள் இந்த மாதிரி அக்கப்போர் தனமான வேலைகளை பார்த்து வருகிறார்கள்.

Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

- Advertisement -

Trending News