செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

4 நகைச்சுவை நடிகர்களை இழந்தது தவிக்கும் தமிழ் சினிமா.. கடைசியாக மனோபாலா நடித்த படம்

பொதுவாகவே எந்த படங்களாக இருந்தாலும் அதற்கு உயிர் ஊட்டும் விதமாக காமெடியும் இருந்தால் தான் அந்த படங்களை ரசித்துப் பார்க்கும் படியாக இருக்கும். அந்த வகையில் இதுவரை தமிழ் சினிமாவுக்கு இந்த நான்கு நகைச்சுவை நடிகர்கள் காமெடியை அர்ப்பணித்து வந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தற்போது இல்லை என்று பார்க்கும்போது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.  அந்த நான்கு நகைச்சுவை நடிகர்களை ஒரு சிறிய தொகுப்பாக இப்பொழுது பார்க்கலாம்.

விவேக்: இவர் 80களில் சினிமாவில் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் புது புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல் போன்ற பல படங்களில் காமெடியனாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அத்துடன் இவர் செய்யும் காமெடி மூலம் மக்களுக்கு ஏதாவது ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று நல்ல கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இவர் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து இவருடைய நகைச்சுவையை கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். மறுபடியும் இந்த மாதிரி ஒரு நகைச்சுவை நடிகரை பார்க்க முடியுமா என்று தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் அனைவரும் இவர் இல்லாததை நினைத்து தவித்து வருகிறார்கள்.

Also  read: குணச்சித்திர கேரக்டரில் நடித்து வெற்றி கண்ட விவேக்கின் 6 படங்கள்.. தனுஷை வெளுத்து வாங்கிய ஏகாம்பரம்

மயில்சாமி: இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவையாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார். அத்துடன் மேடை நாடக நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், பல குரல் மன்னனாகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அன்று இவருடைய 57 வது வயதில் மறைந்தார். இவருடைய இழப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

டிபி கஜேந்திரன்: இவர் இயக்கிய படங்கள் எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா பல படங்களை இயக்கியிருக்கிறார். அத்துடன் பந்தா பரமசிவம், சந்திரமுகி, வேலாயுதம், வில்லு, பேரழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 72 வயதான நேரத்தில் உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்து கடந்த பிப்ரவரி மாதம் 5-ம் தேதி உயிரிழந்தார்.

Also  read: மனோபாலா மரணத்தில் சர்ச்சையை கிளப்பிய பயில்வான்.. அதிர்ச்சியில் உறைய வைத்த பழக்கம்

மனோபாலா: இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் பணியாற்றி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆகாயகங்கை, பிள்ளை நிலா, சிறப்பறவை, ஊர்காவலன், என் புருஷன் எனக்கு மட்டும் தான் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். அத்துடன் மின்சார கண்ணா, ஆனந்த பூங்காற்றே, சமுத்திரம், ஜெயம், சந்திரமுகி போன்ற பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். அத்துடன் இவர் கடைசியாக விஜய்யுடன் லியோ படத்திலும் நடித்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு கலைஞர் இரு தினங்களுக்கு முன்பு கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இவரை தமிழ் சினிமா மிஸ் பண்ணியது.  இவருடைய ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இப்படி கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நான்கு நகைச்சுவை நடிகர்களை இழந்ததால் தமிழ் சினிமா மிகவும் வருத்தத்துடன் தவித்து வருகிறார்கள். அத்துடன் இவர்களுடைய எதார்த்தமான காமெடியை இனிமேல் பார்க்க முடியாது என்று ரசிகர்களும் அவர்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also  read: அப்பாவின் மரணத்தில் தேவையில்லாமல் புரளியை கிளப்ப வேண்டாம்.. மயில்சாமியின் மகன் ஆவேசம்

Trending News