சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

மனோபாலாவின் குருநாதரை பற்றி பேசிய நெகிழ்வான தருணம்.. இந்த இயக்குனர் இல்லைன்னா இவர் இல்லை

பொதுவாகவே சினிமாவில் ஒருவருக்கொருவர் வாய்ப்பு கொடுத்து அவர்களை தூக்கிவிட்டு ரசிகர்களுக்கு முன்னாடி கொண்டு வருவது மிகப்பெரிய சாமர்த்தியம். அந்த வகையில் மனோபாலா, பாரதிராஜாவிடம் கிழக்கே போகும் ரயில் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து அடுத்த படமான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் முழு நேர இயக்குனராக அறிமுகமானார்.

இப்படி தொடர்ந்து 20 படங்களுக்கும் மேல் இயக்குனராக பணிபுரிந்த பிறகு அடுத்து ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் இவரை பார்த்து இப்படியே காலத்தை ஓட்டி விடாத. கேமராக்கு பின்னாடி நீ செய்ற நகைச்சுவை எல்லாத்தையும் கேமரா முன்னாடி செய்து காட்டு. உனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று இவரை ஊக்கப்படுத்தியது இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தான்.

Also read: சென்னையில் இருந்தும் மனோபாலா இறப்பிற்கு வராத 5 நடிகர்கள்.. துக்கம் விசாரிக்காத பரிதாபம்

அதன்படி அவர் சொல்வதோடு மட்டுமில்லாமல் அவர் இயக்கிய நட்புக்காக படத்தில் என்னை கூப்பிட்டு முழு நேர நகைச்சுவை நடிகராக நடிக்க வைத்ததும் இவர்தான். இவர் இல்லையென்றால் இப்பொழுது எல்லோருக்கும் தெரிகிற மனோபாலா வந்திருப்பாரா என்று எனக்கு சந்தேகம் தான். அந்த அளவுக்கு எனக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை அவருடைய படங்களில் நடிக்க வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மின்சார கண்ணா, சமுத்திரம், வில்லன், வரலாறு போன்று இவர் இயக்கிய படங்களில் அனைத்திலும் ஏதாவது ஒரு கதாபாத்திரம் எனக்கு கொடுத்து அதில் என்னை நடிக்க வைத்திருப்பார். இவர்தான் சினிமாவை பொருத்தவரை என்னுடைய குருநாதர் என்று நான் மனதில் இவருக்கு ஒரு பெரிய இடத்தை வைத்திருக்கிறேன். இவருடைய ஆசீர்வாதத்தில் நான் இப்பொழுது வரை 980 மூவிஸ் பண்ணி இருக்கிறேன்.

Also read: மனோபாலா இறப்பில் முதல் ஆளாக வந்து கதறிய H. வினோத்.. இவர்களுக்குள் இப்படி ஒரு பந்தமா

இவருடைய வார்த்தை தான் எனக்கு எப்போதுமே வேதவாக்கு இவர் சொல்வதை மட்டும் தான் நான் சினிமாவில் கேட்டு வந்திருக்கிறேன். இவர் சொன்னது மாதிரி எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது அத்துடன் நான்கு மொழிகளிலும் நடித்துள்ளேன். 45 வருஷமாக கேமராவை பார்த்து நடித்து வருகிறேன். இப்பொழுது இல்லை எப்பொழுதும் நான் கேமரா முன்னாடி நடித்துக் கொண்டே தான் இருப்பேன் என்று கேஎஸ் ரவிக்குமாரை பற்றி நெகிழ்வாக பேசியிருக்கிறார்.

இதை கேட்டதும் கேஎஸ் ரவிக்குமார் இதற்கெல்லாம் காரணம் நான் இல்லை அவருடைய உழைப்பும் விடாமுயற்சியும் தான் காரணம். எத்தனையோ பேர் இவருடைய தோற்றத்தை பார்த்து கிண்டல் அடித்திருக்கிறார்கள். ஆனாலும் எதற்கும் கொஞ்சம் கூட கவலைப்படாமல் நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக தொடர்ந்து இத்தனை படங்கள் நடித்து வந்திருப்பதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று இவர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டி இருக்கிறார்கள்.

Also read: பட்டதற்கு பின் புத்தி தெளிந்த மனோபாலா.. இனி இதை மாதிரி யாரும் செய்யாதீங்க என கடைசியா கொடுத்து அட்வைஸ்

- Advertisement -spot_img

Trending News