திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மீண்டும் கெத்தாக ஜோடி போட்டு வந்து விக்கி-நயன்.. இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படங்கள்

இந்த வருடத்திற்கான 16வது ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. மேலும் நிறைய சினிமா பிரபலங்கள் முதன் முதலில் சேப்பாக்கத்தில் சென்னை விளையாட ஆரம்பித்ததில் இருந்து நேற்றைய போட்டி வரை நேரில் வந்து கண்டு களிக்கின்றனர்.

நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியுடன் போட்டியிட்டது. கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு சென்னை மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தி இருக்கிறது சூப்பர் கிங்ஸ். இந்த ஆட்டத்தினை நேரில் பார்ப்பதற்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு நேற்று வந்திருந்தனர்.

Also Read:4 வருடத்திலிருந்து அட்லீக்கு கிடைத்த விடிவு காலம்.. வெளியானது ஜவான் ரிலீஸ் தேதி

நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என நிறைய பிரபலங்கள் நேற்று சேப்பாக்கம் ஆடியத்தில் ஆக்கிரமித்து இருக்க, எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி தான். இதுதான் இவர்கள் முதன் முதலில் இந்த ஐபிஎல் போட்டியை சென்னை ஸ்டேடியத்தில் வந்து பார்ப்பது.

இவர்கள் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்பகிர்ந்திருந்தது. மேலும் மஞ்சள் நிற டி-ஷர்டில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் வெள்ளை நிற உடையில் நயன்தாரா அந்த போட்டியை காண வந்திருந்தனர். விக்னேஷ் சிவனும் இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

                             சென்னை அணி போட்டியை நேரில் கண்டு களித்த நயன்தாரா-விக்னேஷ்சிவன் தம்பதி

Wikki Nayan

Also Read:ஒன்றாக வசித்து வந்தபோது பிரபுதேவா சொன்ன அந்த ஒத்த வார்த்தை.. இதனால்தான் நயன்தாரா பிரிந்து சென்றாராம்!

இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் சிஎஸ்கே அணியின் வெற்றி, மறுபக்கம் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் வருகை என நேற்றைய சென்னை அணி போட்டி ஒட்டுமொத்த சமூக வலைத்தளத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மும்பையில் அந்த படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக தஞ்சம் அடைந்திருக்கும் நயன்தாரா, இந்த போட்டியை பார்ப்பதற்காக நேற்று சென்னை வந்திருக்கிறார். நயன்தாரா ஜவான் திரைப்படத்திற்கு பிறகு நடிகர்கள் மாதவன் மற்றும் சித்தார்த்துடன் இணைந்து டெஸ்ட் எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also Read:பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்த நடிகை இணைந்ததால் நான் நடிக்க மாட்டேன் படத்தை நிராகரித்த நயன்தாரா.!

Trending News