ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பீட்டர் பால் இறப்புக்கு முழுக்க முழுக்க காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த வனிதா

நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால்  கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கிற்கு கூட வனிதா ஒரு மனைவியாக கலந்து கொள்ளவில்லை என்றாலும் பழகியதற்காகயாவது சென்றிருக்கலாம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் இப்போது ஜாலியாக பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

அதிலும் பீட்டர் பால் இறந்து போனதற்கு முழுக்க முழுக்க இதுதான் காரணம் என பகீர் பேட்டி அளித்துள்ளார். வனிதா தன்னுடைய யூடியூப் சேனலை கவனித்துக் கொண்ட பீட்டர் பாலுடன் காதல் ஏற்பட்டு அவரை கடந்த 2020 ஆம் ஆண்டில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

Also Read: சமந்தாவை போல் வனிதாவுக்கு இருக்கும் விசித்திர நோய்.. அவரே வெளியிட்ட சீக்ரெட்

ஆனால் அவருடைய முதல் மனைவி எலிசபெத்திற்கு அரசியல் செல்வாக்கு இருந்ததால் தொடர்ந்து வந்த பிரச்சினையினால் பீட்டர் பாலை வனிதா ஒதுக்கி விட்டார். இதனால் மனமுடைந்த பீட்டர் பால் 24 மணி நேரமும் மது அருந்து கொண்டே இருந்துள்ளார். அவர் உடம்பில் ரத்தத்தை விட அதிக அளவு மது தான் ஓடும்.

அந்த அளவிற்கு சரக்கு பாட்டிலும் கையும் இருந்திருக்கிறார். அதனால் அவருடைய கல்லீரல் சுத்தமாகவே செயலிழந்து போய்விட்டது. மாற்று கல்லீரல் சிகிச்சைக்கு கோடிக்கணக்கில் செலவாகும். ஆனால் அதை செய்வதை விட, இருக்கும் வரை அனுபவித்து செத்துவிடலாம் என்ற மனநிலைக்கு பீட்டர் பால் வந்துவிட்டார்.

Also Read: அவர் என் கணவனே இல்ல, திடீரென குண்டைத் தூக்கிப் போட்ட வனிதா.. இறந்த பின்னும் இப்படியா அவமானப்படுத்துவது

அவரது இறப்பிற்கு முழு காரணம் குடிப்பழக்கம் தான் என்று வனிதா சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல பீட்டர் பாலுக்கும் தனக்கும்  திருமணமே ஆகவில்லை. சட்டப்படி பீட்டர் பால் என் கணவர் இல்லை. நான் அவருக்கு மனைவி இல்லை. நான் எப்போதுமே சிங்கிள் உமன் தான் என்று கெத்து காட்டுகிறார்.

இருப்பினும் அவர் நினைத்திருந்தால் பீட்டர் பாலின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இறப்பிற்கு கூட செல்லாமல் அவமானப்படுத்தி விட்டார் என்று சோசியல் மீடியாவில் வனிதாவை குறித்து பலரும் விமர்சிக்கின்றனர்.

Also Read: இது கோழியா? இல்ல காக்காவா? KFC-யுடன் மல்லுக்கு நிற்கும் வத்திக்குச்சி வனிதா

- Advertisement -

Trending News