திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

மனிதத்தை போற்றும் அடுத்த சூப்பர் ஹிட் படம்.. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் 2018 முழு விமர்சனம்

சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படம் ரசிகர்களை கவர்ந்தது. அதாவது ஜாதி, மதம் பேதமற்ற மனிதத்தைக் கொண்டாடும் படமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. ஆகையால் பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டியிருந்தனர். அதேபோல் இப்போது 2018 என்ற மலையாள படம் வெளியாகி உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் மிகப்பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதை பிரதிபலிக்கும் படமாக தான் இயக்குனர் இந்த படத்தை எடுத்திருந்தார். படத்தின் தொடக்கமே அருவி குளத்தில் தொடங்குகிறது. மேலும் படத்தில் பலர் நடித்திருந்தாலும் ஒவ்வொருக்கும் சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார்.

Also Read : டைரக்ட் பண்ணுவதிலிருந்து பிரேக் எடுத்த 5 சூப்பர் ஹிட் இயக்குனர்கள்.. கடனை அடைக்கப் போராடும் சசிகுமார்

மேலும் ஒரு பிரச்சனை வரும்போது மக்கள் எவ்வாறு ஒன்று கூடுகிறார்கள் என்றும், மனிதம் எப்படி செயல்படுகிறது என்பதை இந்த படம் காட்டியுள்ளது. புயலுக்கு பின் அமைதி என்பது போல இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக சென்றாலும் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இப்படம் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் நரேன், சதீஷ், கலையரசன், கௌதமி, டோவினோ மற்றும் பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். எல்லோருமே தங்கள் கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் கனகச்சிதமாக பொருந்தி இருந்தார்கள். மேலும் படத்திற்கு இசை பக்கபலமாக அமைந்திருந்தது.

இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்பதை அடுத்த தலைமுறைகளுக்கும் காட்டும் அற்புத படமாக 2018 எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிறந்த படத்தை கொடுத்ததற்கு இயக்குனருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மேலும் இதுபோன்று மற்றும் பல படைப்புகளை தருமாறு இயக்குனரை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Also Read : அயோத்தி பட நடிகையுடன் ஜோடி சேரும் கவின்.. டாடா வெற்றிக்குப் பிறகு இணையும் கூட்டணி

Trending News