ரஜினி முன்னாடியே இந்த படம் ஓடாது எனக் கூறிய ராகவா லாரன்ஸ்.. கடுப்பாகி சூப்பர் ஸ்டார் எடுத்த முடிவு

டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் ரஜினியின் முன்னாடியே அவருடைய படத்தை ஓடாது என அடித்து சொல்வதும், அதன் பிறகு சூப்பர் ஸ்டார் எடுத்த அதிரடி முடிவு என்ன என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

21 வருடத்திற்கு முன்பு வெளியான சூப்பர் ஸ்டாரின் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடலையும் வெவ்வேறு இயக்குனர்களை வைத்து நடனம் அமைக்க வேண்டும் என ரஜினி முடிவெடுத்தார். அந்த சமயத்தில் ராகவா லாரன்ஸ் டாப் டான்ஸ் மாஸ்டர் ஆக இருந்ததால், அவருக்கும் ஒரு பாடலை கொடுக்க வேண்டும் என ரஜினி முடிவெடுத்து அவரை அழைத்து சூழ்நிலை என்ன என்பதை சொன்னார்.

தற்போது லாரன்ஸ் தனக்கு பாபா படத்தின் முழு படத்தையும் போட்டு காட்டினால் தான் அந்தப் பாடத்திற்குரிய பாடல் காட்சியை சிறப்பாக அமைக்க முடியும் என கேட்டுக்கொண்டார். உடனே அவர்களும் முழு படத்தையும் போட்டு காட்டினார்கள். படத்தை பார்த்தவுடனே லாரன்ஸ் ரஜினியின் முகத்திற்கு நேராகவே ‘படம் நல்லாவே இல்ல சார். நிச்சயம் ஓடாது’ என்ன சொல்லிவிட்டாராம்.

அது ரஜினிக்கு மிகவும் பேரதிர்ச்சியை தந்தது. பெரும் நம்பிக்கை வைத்திருந்த இந்த படத்தை இப்படி சொல்லிவிட்டாரே! என ரஜினி உள்ளிட்ட படக்குழுவினரும் திகைத்தனர். ஆனால் ராகவா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகராகவே அந்த படத்தை பார்த்ததால் தான் அப்படி தெரிகிறது. நிறைய படங்களுக்கு டான்ஸ் மாஸ்டர் ஆக பணிபுரிந்த ராகவா லாரன்ஸ் பொதுவாக ஒரு படத்தை பார்க்க தெரியாத ஆளாக இருக்கிறாரே! என சூப்பர் ஸ்டார் படக்குழுவினருக்கு ஆறுதல் அளித்தார்.

திகைப்புக்கு மத்தியிலும் அதிரடி முடிவாக இந்த படத்தில் ‘மாயா மாயா’ பாடலுக்கு நடன இயக்குவதற்கான வாய்ப்பை ராகவா லாரன்ஸுக்கு கொடுத்தார். இவ்வாறு ரஜினி ரசிகராகவே பாபா படத்தை பார்த்து 21 வருடத்திற்கு முன்பே விமர்சித்திருக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சொன்னது அதன் பிறகு சரியாகிவிட்டது.

ரஜினியின் திரை வாழ்வில் பாபா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த படத்தை சமீபத்தில் அவரது பிறந்த நாளன்று ரீ ரிலிஸ் செய்தும் ஹிட் கொடுக்க முடியவில்லை. இப்படி ரஜினிக்கு முன்பே அவருடைய தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ் ‘இந்த படம் ஓடாது’ என பாபா படத்தை சொல்லும்போதே சூப்பர் ஸ்டார் சுதாரித்திருக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →