விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் வருகிற எபிசோடில் கோபியின் அம்மாவுக்கு ராதிகா இங்கே வந்து இருப்பது பிடிக்காமல் அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்மறையாக செய்து வருகிறார். போர் அடிக்குது என்று ராதிகா டிவி பார்க்கும் பொழுது அதை பார்க்க விடாமல் ஈஸ்வரி தடுத்து விடுகிறார். ஏன் இப்படி பண்ணுகிறீர்கள் என்று ராதிகா கேட்டதற்கு இது என்னுடைய வீடு நான் மட்டும்தான் டிவி பார்க்க அனுமதி உனக்கு இங்க எந்தவித உரிமையும் இல்லை என்று சொல்கிறார்.
அதன் பிறகு அடுப்பங்கரையில் ராதிகா சமையல் பண்ண போகும்போது அதையும் செய்ய விடாமல் தடுக்கிறார். உடனே ராதிகா ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள் என்று கேட்க அதற்கு கோபியின் அம்மா நீ இந்த வீட்டை விட்டு சீக்கிரம் வெளில போன தான் எனக்கு நிம்மதி. அந்த நாளும் கூடிய சீக்கிரத்தில் வரும் என்று சொல்கிறார். அத்துடன் என் மகனே உன்னை வேண்டாம் என்று எங்களுடன் வந்து விடுவார், கடைசியில் நீ தனியாகத்தான் நிற்பாய் என்று சொல்கிறார்.
Also read: இனியாவை பொக்கிஷமாக பாதுகாக்கும் விக்ரம்.. இங்கிதம் தெரியாமல் அசிங்கப்பட்ட நல்லசிவம்
இதை கேட்ட ராதிகா அப்படி என்றைக்கும் கனவுல கூட நடக்காது. நீங்களே இந்த வீட்டின் மருமகள் நீதான், கோபிக்கும் மனைவி நீதான் என்று சொல்லுகிற காலம் வரும் நான் வரவைப்பேன் என்று சவால் விடுகிறார். அது இந்த ஜென்மத்துல நடக்காது எனக்கு எப்போதுமே மருமகள் என்றால் அது பாக்கியா தான் என்று சொல்ல, அதற்கு ராதிகா வெளியே சொன்னால் சிரிப்பாங்க. அவங்களுக்கு சட்டப்படி விவாகரத்து ஆயிடுச்சு இனிமேல் அவங்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
பிறகு செழியன் தற்போது அடிக்கடி அவருடைய ஆபீஸின் ப்ராஜெக்ட் ஹெட் என்று சொல்லி ஒரு பொண்ணை அடிக்கடி சந்திக்கிறார். இவருக்கு எந்தவித ஈடுபாடும் இல்லை என்றாலும் அந்த பொண்ணு செழியனை பார்த்து ஆசைப்படுகிறார். இதை பார்க்கும் பொழுது எங்கே கோபி மாதிரி செழியனும் சிக்கிருவாரோ என்று தோன்றுகிறது. ஏற்கனவே கோபியோட கேரக்டர் தான் இவருக்கும்.
Also read: குணசேகரனுக்கு சரியான ஆளு நந்தினி.. ஜனனி கஸ்டடியில் அருண்
அப்படி மட்டும் எதுவும் நடக்காமல் இருந்தால் ஓகே தான். அடுத்தபடியாக வீட்டில் பாக்கியா அவருடைய டியூஷன் தோழியிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த கோபி பழனிச்சாமிடம் தான் பேசுகிறார் என்று தவறாக புரிந்து கொண்டு வெளியில பார்த்து பேசுவது மட்டும் இல்லாமல் இங்கே போனிலும் சிரித்து பேசிக்கொண்டே இருக்கிறாள் என்று கடுப்பாகிறார். நான் அவளை விட்டு போனதற்கு பிறகும் இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாள்.
ஆனால் உண்மையிலேயே நான் தான் சந்தோசமா இருக்கணும் இப்ப என்ன என் நிலைமை அப்படியா இருக்குது. ரூமுக்கு போனாலே ராதிகா என்ன பண்ண போறாளோ என்று நினைக்கவே பக்கு பக்குன்னு இருக்கு என்று புலம்பி கொண்டே மேலே போகிறார். அதே மாதிரி ராதிகா கோபத்தின் உச்சகட்டத்தில் இருந்து அவரிடம் சண்டை போடுகிறார். ஒவ்வொரு நாளும் கோபி ராதிகாவிடம் மாட்டிக்கொண்டு சந்தோஷத்தை இழந்து வருகிறார்.
Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்