செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லால் சலாம் படத்தில் ஸ்டைலிஷ் செலிபிரிட்டி.. தலைவர் கூட கைகோர்க்கும் செம கூட்டணி

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படமும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதனுடைய ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்மரமாக போய்க் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் விஷ்ணு விஷால், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன் தயாரிக்கிறது. அத்துடன் இப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ரஜினி, அலாவுதீன் அற்புத விளக்கு படத்திற்கு பிறகு அதாவது 44 வருடங்கள் ஆகி வந்த நிலையில் தற்போது தான் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Also read: நடிகைகள் என்றாலே ரஜினிக்கு ஆகாது..அயன் லேடியிடம் மட்டும் காட்டும் நெருக்கத்தை புட்டு புட்டு வைத்த சுஹாசினி

இந்நிலையில் லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் வெளியானதில் இருந்து தற்போது வரை அதிக அளவில் கேலியும், கிண்டலும் செய்து கலாய்த்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பலதரப்பட்ட கருத்துக்களையும் தெரிவித்து தலைவரை இப்படி அசிங்கப்படுத்தி விட்டீர்களே என்று ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அத்துடன் இந்த போஸ்டரை பார்த்த பிறகு ப்ளூ சட்டை மாறன் அவர் தரப்பிலிருந்து சில பதிவுகளை போட்டிருக்கிறார். அதாவது இது எடிட்டிங் பண்ணின போஸ்டர் மாதிரி இருக்கிறது. இது என்ன பிரியாணி கடைக்கு விளம்பரம் பண்ணுகிறீர்களா என்று கேலி செய்திருந்தார். மேலும் இது ரஜினி ரசிகர்களுக்கும் வருத்தத்தை அளித்திருக்கிறது. இதை சரி செய்யும் விதமாக புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Also read: கமலின் வீட்டு வாசலிலேயே காத்துக் கிடந்த சூப்பர் ஸ்டார்.. உண்மையை உடைத்த வாரிசு

அதாவது தலைவருடன் ஸ்டைலிஷ் செலிபிரிட்டி கைகோர்க்கிறார். இவர் யார் என்றால் மலிங்க சத்யா. இவர் லால் சலாம் படத்தில் முக்கியமான கேமியோ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இவருடன் சேர்ந்து அதற்கான புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார். இவர் பொதுவாக நடிகர்களுக்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றுவார்.

அப்படிப்பட்ட இவர் லால் சலாம் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார் என்றால் அது எந்த அளவிற்கு பொருத்தமாக இருக்கும் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. அதிலும் இவர் அணிந்திருந்த சட்டையை பார்த்தால் ஒரு ஜோக்கர் போல தான் இருக்கிறது. இப்படி இருக்கையில் லால் சலாம் படத்தில் இவரோட கேரக்டர் என்னவாக இருக்கும். அத்துடன் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் வெளியிட்டு இப்படத்திற்கு எப்படியாவது ஹைப்பை ஏற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள்.

லால் சலாம் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார்

lal salaam-cinemapettai

Also read: லலித், கமலை விரட்டி விட்ட சன் பிக்சர்ஸ்.. சென்டிமென்ட் ஆக பேசிய லாக் செய்த ரஜினி

Trending News