நடிகர் அஜித் நடிப்பதையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேஸ்களில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் சமீபத்திய அஜித் படங்களில் பெரும்பாலான காட்சிகள் பைக் வீலிங், பைக் ரேஸ் சாகசம் அதிகமாக இடம்பெறுகிறது. தனது 52 வயதிலும் நடுரோட்டில் எந்த ஒரு டூப்பும் இல்லாமல் பைக் ரேஸ் செய்ய தெரிந்த ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையும் அஜித்துக்கு உண்டு.
தற்போது கூட தனது நண்பர்களுடன் தன் பைக்கை எடுத்துக்கொண்டு வேர்ல்ட் டூர் சென்றுள்ளார். நேபாளம், பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் கடும் நிலச்சரிவில் சேரும், சகதியையும் பாராமல் அஜித் தனது சாகசத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பைக் சாகசத்தை வைத்து அஜித் நடித்த 4 படங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
Also Read: படம் ஆரம்பிக்கும் முன்பே அதிர்ச்சியை கிளப்பிய அஜித்.. பல சிக்கலில் மாட்டி தவிக்கும் மகிழ் திருமேனி
வலிமை: இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடித்திருப்பார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் அஜித் நடிப்பில் வெளியான இப்படம் முழுக்க, முழுக்க பைக்கினை வைத்து தான் கதை உருவாக்கப்பட்டிருக்கும். பைக்கில் சென்று பெண்களின் செயினை வழிப்பறி செய்யும் கும்பலை அஜித் தன் பைக் சாகசத்தை காட்டி கலக்கியிருப்பார்.
மங்காத்தா: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் செம ஹிட்டானது. அஜித் இப்படத்தில் ஆண்டி ஹீரோவாக நடித்து அசத்திய நிலையில், கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கும். இப்படத்தில் 500 கோடியை அபகரிக்க அஜித் செம பிளான் போடுவார், அந்த சமயத்தில் நடிகர் வைபவை பைக் பின்னால் அமர்த்தி நடுரோட்டில் வீலிங் செய்யும் அஜித்தின் சாகசம் இன்று வரை பார்ப்போருக்கு மெய்சிலிர்க்க வைக்கும்.
Also Read: கடைசியாக அஜித் எதிர்பார்த்ததை செய்ய போகும் மகிழ்திருமேனி.. ஏகே ஓட கேம் இனிமேதான்
விவேகம்: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் பெரும் தோல்வியடைந்தது. இருந்தாலும் இப்படம் முழுவதும் பைக் ரேஸ் காட்சியில் அஜித் பின்னி பெடலெடுத்திருப்பார். இப்படத்தில் தான் அஜித் மிகவும் விலைமதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்குகளை ஓட்டி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருப்பார்.
பரமசிவன்: இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் அஜித், லைலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் சுமாராக ஓடிய படமாகும். இருந்தாலும் அஜித்தின் பழி வாங்க துடிக்கும் கதாபாத்திரத்தின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. இப்படத்தில் அஜித் பைக்கை ஒட்டிக்கொண்டு துப்பாக்கிகளால் தன்னை துரத்துபவர்களை சுடும் காட்சி இப்படத்தில் பெருமளவில் ரசிக்கப்பட்ட காட்சியாகும்.
Also Read: அஜித் நிராகரித்த 5 பிரபலங்கள்.. அவமானப்படுத்தியதால் இன்று வரை வாய்ப்பு கொடுக்காத ஏ கே