புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

ஜெமினி கணேசனை காதல் வசப்படுத்திய 4 பெண்கள்.. 78 வயதில் நடந்த நான்காவது திருமணம்

பத்மஸ்ரீ, கலைமாமணி ஆகிய விருதுகளை பெற்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தவர்தான் ஜெமினி கணேசன். இவரின் காதல் வசமான நடிப்பால் காதல் மன்னன் என்ற பெயரை பெற்றவர். மேலும் இவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கையும் அனுபவித்து வாழ்ந்தார் என்றே கூறலாம்.

படங்களில் இவரின் காதல் காட்சிகள் எவ்வாறு மக்களை ஈர்த்ததோ அதே போல் நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாகவே வலம் வந்தார். அவ்வாறு இவரின் காதலில் விழுந்து மனைவியாய் வாழ்ந்த 4 பெண்களைப் பற்றி இங்கு காணலாம்.

Also Read60-70 களில் ஹீரோயின்கள் விரும்பிய 5 காதல் மன்னர்கள்.. ஜெமினிக்கு டஃப் கொடுத்த ஜெயலலிதாவிற்கு பிடித்த ஹீரோ

அலமேலு: 1940ல் இல்லற வாழ்க்கையில் ஈர்ப்பு இல்லாத இவர் அலமேலு என்ற பெண்ணை மணந்து கொண்டார். அதன்பின் அன்பிற்கு அடையாளமாக வாழ்ந்த பெண் வாழ்ந்த நிலையில் இவர்களுக்கு பிள்ளைகள் பிறந்தார்கள். இவரை ஜெமினி அவர்கள் செல்லமாய் பாபுஜி என்று கூப்பிடுவாராம். இவர் குழந்தைகளை அரவணைக்கும் அன்பான தாயாக கடைசி வரை ஜெமினியின் லீலைகளை தெரிந்தும் மௌனம் சாதித்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

புஷ்பவல்லி: தமிழிலும், தெலுங்கிலும் கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை புஷ்பவல்லி. இவர் திருமணம் ஆனவர் என்பது தெரிந்தும் அவரின் விவாகரத்துக்கு பின்பு அவரை காதலித்து வந்தார் ஜெமினி. இவர்களின் காதல் ரகசியமாக இருப்பின் இவர்கள் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிடுகிறது. மேலும் இவர் தமிழில் மிஸ் மாலினி என்னும் படத்தில் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தெலுங்கில் சத்யபாமா என்ற படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

Also Readசாம்பார் என்ற பட்டத்தை வாங்கிய ஜெமினி கணேசன்.. பலரும் அறியாத காதல் மன்னனின் லீலைகள்

சாவித்திரி: தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி ஆகிய மொழிகளில் 300க்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை சாவித்திரி. இதில் குணசுந்தரி, மனம் போல் மாங்கல்யம், மகேஸ்வரி, மாயாபஜார், பாசமலர் ஆகிய படங்கள் இவரின் வெற்றிக்கு அடையாளமாக அமைந்தது. மேலும் இவர் நடிகை ஆடிஷனுக்கு ஜெமினி ஸ்டுடியோவிற்கு வந்த போது காதல் மன்னனால் ஈர்க்கப்பட்டார். அதன்பின் மனம் போல் மாங்கல்யம் என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்த பின்பு காதல் மலர்ந்தது. மேலும் ஜெமினி கணேசன் இவரை முறைப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலியான ஆண்ட்ரூ: ஜெமினியின் நடிப்பால் ஈர்க்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 1997ல் இவரை திருமணம் செய்து கொண்டார் காதல் மன்னன். அப்பொழுது 78 வயதான ஜெமினிக்கு 36 வயது பெண்ணுடன் திருமணம் நடந்தது அதிர்ச்சியான விஷயமாக கருதப்பட்டது. இவர்கள் இருவரும் எட்டு வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தார்கள், அதன்பின் 2005ல் ஜெமினி கணேசன் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: புகழ் போதையில் ஜெமினியை கழட்டிவிட்ட நடிகை.. மறைக்கப்பட்ட நடிகையர் திலகத்தின் மறுபக்கம்

- Advertisement -spot_img

Trending News