ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

ரீ என்டரி கொடுத்தும் பிரயோஜனம் இல்லாத 6 நடிகர்கள்.. சினிமாவிற்கு ஒரேடியாக முழுக்கு போட்டு போன கரன், விக்னேஷ்

சில நடிகர்கள் 90களில் மிகவும் பிரபலமான ஹீரோவாக வலம் வந்திருக்கிறார்கள். அதன் பின் தொடர்ந்து அவர்களால் படம் நடிக்க முடியாமல் போன பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் மறுபடியும் சினிமாவிற்கு வந்தார்கள். ஆனால் அதற்கும் பிரயோஜனம் இல்லாமல் அவர்களுடைய படங்கள் கை கொடுக்கவில்லை. அதனால் சில நடிகர்கள் சினிமாவை விட்டு ஒரேடியாக போய்விட்டார்கள். அந்த நடிகர்கள் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

செல்வா: இவர் 90ல் தமிழில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ராக்காயி கோயிலிலே, நாட்டுப்புற பாட்டு, சக்திவேல், மைந்தன் போன்ற பல படங்கள் நடித்து வந்த இவர் 1998 ஆம் ஆண்டு கோல்மால் படத்திற்கு பிறகு 12 வருடங்களாக சினிமா பக்கமே தலை காமிக்கவில்லை. அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு யுத்தம் செய் படத்தின் மூலம் ஏசிபி திரிசங்கு கேரக்டரில் ரீ எண்டரி கொடுத்தார். அதன் பிறகு ஈட்டி, முகமூடி, வலிமை படங்களில் நடித்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார்.

சரவணன்: இவர் 90ல் பொண்டாட்டி ராஜ்ஜியம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து சூரியன் சந்திரன், சந்தோசம், பொன்மான தேடி போன்ற பல படங்களில் நடித்து இவருக்கென்று ஒரு தனி அடையாளத்தை பதித்து விட்டார். அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பின் பருத்திவீரன் என்ற படத்தில் செவ்வாழை கேரக்டரில் ரீ என்ட்ரி ஆனார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. இதற்குப் பிறகு பல படங்களில் நடித்து வந்திருந்தாலும் இவருக்கு என்று சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அதிலும் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். தற்போது சின்னத்திரைக்கு அடி எடுத்து வைத்தார். ஆனால் இதிலும் பாதியிலேயே போய்விட்டார்.

Also read: கிட்டத்தட்ட 70% முடிந்த 5 இரண்டாம் பாகம் படங்கள்.. தெறிக்கவிடும் வெற்றிமாறன் குமரேசன் கூட்டணி

ரஞ்சித்: இவர் 1993இல் பொன்விலங்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து மைனர் மாப்பிள்ளை, பாரதி கண்ணம்மா, நினைத்தேன் வந்தாய், புதுமைப்பித்தன், மனைவிக்கு மரியாதை, கண்ணன் வருவான் போன்ற பல படங்களில் ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக மற்றும் வில்லன் ஆகவும் இவருடைய முத்திரையை பதித்தார். பிறகு கொஞ்ச காலமாக சினிமாவில் நடிக்க வராமல் ஒதுங்கி விட்டார். அதன் பிறகு சின்னத்திரையில் செந்தூரப்பூவே என்ற நாடகத்தின் மூலம் ரீ எண்டரி ஆனார். ஆனால் அதுவும் பாதிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது கெஸ்ட் ரோலில் சீரியலில் நடித்து வருகிறார்.

டி ராஜேந்தர்: இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இவருடைய மிகப்பெரிய சிறப்பே இவருடைய படங்களில் ஹீரோவாக, இயக்குனராக, எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் போன்ற பல விஷயங்களை இவர் ஒருத்தரை இறங்கி அடிப்பார், இவர் தமிழில் ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். அதன் பிறகு ரயில் பயணங்களில், கிளிஞ்சல்கள், உயிருள்ளவரை உஷா போன்ற பல குடும்ப படங்களை எடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்டக் கூடியவர். அதன் பிறகு ஹீரோவாக வீராசாமி என்ற படத்தில் மூலம் மறுபடியும் வந்தார். ஆனால் இந்த காலத்திற்கு இவருடைய படம் செட் ஆகாமல் போய்விட்டது.

Also read: ஜெமினி கணேசனை காதல் வசப்படுத்திய 4 பெண்கள்.. 78 வயதில் நடந்த நான்காவது திருமணம்

விக்னேஷ்: இவர் தமிழில் சின்னத்தாயி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். இதன் பிறகு கிழக்கு சீமையிலே, பசும்பொன், நாடோடி மன்னன், மண்ணுக்கு மரியாதை போன்ற பல படங்களில் நடித்து ஹீரோக்கான அங்கீகாரத்தை பெற்றார். அதன் பிறகு 2006 இல் ஆச்சாரியா என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார். பிறகு 2021ல் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

கரன்: இவர் தமிழில் அண்ணாமலை படத்தின் மூலம் அறிமுகமானார். இதற்கு முன்னதாக மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு தமிழில் நம்மவர், சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்பிள்ளை, காதல் கோட்டை, நேருக்கு நேர், காதல் மன்னன், கண்ணெதிரே தோன்றினாள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். பிறகு கொக்கி என்ற படத்தின் மூலம் மறுபடியும் ரீ என்டரி ஆனார். இதற்கடுத்து கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன், காந்தா, சூரன், உச்சத்தில சிவன் போன்ற பல படங்கள் ஹீரோவாக நடித்தார். ஆனால் இந்த படம் எல்லாம் இவருக்கு கை கொடுக்காததால் 2016 க்கு பிறகு சினிமாவை விட்டு வெளியேறி விட்டார்.

Also read: சினேகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 6 நடிகர்கள்.. ஒரே படத்தில் கேரக்டரை டேமேஜ் பண்ணிய தனுஷ்

- Advertisement -spot_img

Trending News