செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜெய் பீம் மணிகண்டன் எழுத்தாளராக பணியாற்றிய 5 படங்கள்.. அஜித் படத்துக்கு வசனம் எழுதிய ராஜாக்கண்ணு

நடிகர் மணிகண்டன் ஜெய் பீம் திரைப்படத்தில் ராஜாக்கண்ணு என்னும் கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. மணிகண்டன் சமீபத்தில் நடித்த குட் நைட் திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். இவருடைய வசனங்களில் இந்த ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகி மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

பீட்சா II: வில்லா: 2012 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பீட்சா படத்தின் இரண்டாம் பாகமாக பீட்சா II: வில்லா திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, நாசர், எஸ். ஜே. சூர்யா, காளி வெங்கட், அஞ்சலி ராவ், ராமதாஸ், ஜெயக்குமார், வீகன் ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது.

Also Read:நடிப்பில் முத்திரை பதித்த மணிகண்டனின் 5 கதாபாத்திரங்கள்.. ராஜாக்கண்ணுவாக வாழ்ந்த கலைஞன்

விக்ரம் வேதா: தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தின் வசனங்கள் இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. மீம்ஸ் டெம்ப்லேட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. 2017ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

விஸ்வாசம்: நடிகர் அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடித்த விஸ்வாசம் திரைப்படம் ரிலீஸ் ஆகி சில வருடங்கள் ஆகியும் இன்றுவரை ரசிகர்களின் பேவரைட் படமாக இருக்கிறது. இந்த படத்தில் அஜித்திற்கான பஞ்ச் டயலாக்குகளாக இருக்கட்டும், அப்பா-மகள் செண்டிமெண்ட் வசனங்களாக இருக்கட்டும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read:Good Night Movie Review – குறட்டையால் படாத பாடுபடும் மோட்டார் மோகன்.. குட் நைட் பட முழு விமர்சனம்

தம்பி: இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தம்பி. இந்தப் படத்தில் கார்த்தி, சத்யராஜ் மற்றும் ஜோதிகா நடித்திருக்கின்றனர். தம்பி திரைப்படத்தின் மூல கதையை மணிகண்டன் உடன் இணைந்து நான்கு பேர் எழுதியது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

சில நேரங்களில் சில மனிதர்கள்: எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் அசோக் செல்வன், நாசர் , கே. மணிகண்டன் , அபி ஹாசன், அஞ்சு குரியன் , ரெய்யா, கே.எஸ்.ரவிக்குமார், ரித்விகா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Also Read:பிரதீப்பை ஓரங்கட்ட போகும் மணிகண்டன்.. ஆர்ப்பாட்டம் இல்லாத ஹிட்டுக்கு ரெடியாகும் குட்நைட்

Trending News