வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

கமலை நம்பி தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்ட 5 தயாரிப்பாளர்கள்.. திருப்பூர் சுப்ரமணியம் வெளியிட்ட லிஸ்ட்

தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்து அதற்கு ஏற்ற ஒவ்வொரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பை காட்டி ரசிகர்களால் உலக நாயகன் என்று சொல்லும் அளவிற்கு பேர் வாங்கியவர் தான் கமலஹாசன். இவர் நடித்து எத்தனையோ படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் சில தோல்வி படங்களையும் சந்தித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த எந்தெந்த படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது என்று திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறார். அந்த படங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

ஹேராம்: கமலஹாசன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு ஹேராம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், ஷாருக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை நம் கண் முன்னாடியே காட்டிய படம். இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. வணிக ரீதியாக லாபத்தை சம்பாதிக்கவில்லை. இப்படத்தில் ஆல்ரவுண்ட் கமல் தான் இருந்ததால் நஷ்டமும் அவருக்கு தான் ஏற்பட்டது.

Also read: சிலம்பரசனை தயாரிக்கும் கமலஹாசன்.. வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய உலக நாயகன்

ஆளவந்தான்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஆளவந்தான் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், ரவீனா, மனிஷா கொய்ராலா, சரத்பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளால் குழந்தைகள் மனதளவில் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் வெளியான நேரத்தில் வணிக ரீதியாக தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.

மும்பை எக்ஸ்பிரஸ்: சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கும் படி எடுக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பை ஏற்படுத்தவில்லை. அத்துடன் வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கமல் நிறுவனம் என்பதால் கமலுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

Also read: லியோ படத்தில் கண்டிப்பாக கமலஹாசன்.. சர்ப்ரைஸாக கொடுக்க இயக்குனர் போட்ட பிளான்.!

அன்பே சிவம்: சுந்தர் சி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு அன்பே சிவம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அன்புதான் அனைவருக்கும் முக்கிய ஆயுதம் என்று சொல்லும் விதமாக அமைந்திருக்கும். இதில் கமல் ஊனமுற்ற ஒரு மனிதராக மிகச் சிறப்பாக நடித்திருப்பார். இப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் குறைவான வசூலை பெற்றது.

உத்தம வில்லன்: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு உத்தம வில்லன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், ஜெயராம், ஊர்வசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட ஒருவர் அவருடைய குருவை சந்திக்கும் விதமாக ஏற்படும் விஷயங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.

Also read: தேடி போன மோகன்லால்.. தட்டி கழித்த கமலஹாசன், ரிஷப் ஷெட்டி

- Advertisement -spot_img

Trending News