சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பாக்யராஜ் சினிமா கேரியரில் சொதப்பிய 5 படங்கள்.. வாரிசுகளால் மண்ணை கவ்விய திரைக்கதை மன்னன்

இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் தன்னுடைய சிறந்த திரை கதைகளின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தவர். திரைகதைகளின் மன்னன் என்று இவரை கோலிவுட் சினிமாவில் புகழ்வார்கள். அந்த அளவுக்கு ஒரு படத்தின் திரைக்கதையை வடிவமைக்க கூடியவர். ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்ற கதையில் பாக்யராஜ் தோற்ற படங்களும் உண்டு.

அம்மா வந்தாச்சு: பாக்யராஜ் இயக்கி நடித்த அம்மா வந்தாச்சு திரைப்படத்தில் நடிகை குஷ்பூ கதாநாயகியாக நடித்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்து கொண்டிருந்த வேளையில் பாக்யராஜ் எடுத்த படம் இது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

Also Read:திரையில் பாக்யராஜ் கற்றுக் கொடுத்த 5 ரகசியமான விஷயங்கள்.. துணிவு அஜித்திற்கு டப் கொடுத்த ‘ருத்ரா’

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி : பாக்யராஜ், மீனா, ஜனகராஜ், விஜயகுமார், லிவிங்ஸ்டன் ஆகி ஒரு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் பாக்யராஜ்க்கு தோல்வி படமாகவே அமைந்தது.

ஆராரோ ஆரிராரோ : பாக்யராஜ், பானுப்ரியா, மனோரமா இயக்கத்தில் வெளியான படம் ஆராரோ ஆரிரரோ. இந்த படத்தில் பாக்கியராஜ் மனநல காப்பகத்தில் வேலை செய்யும் ஊழியராக நடித்திருப்பார். படத்தின் காமெடி காட்சிகள் ரசிக்கப்பட்ட அளவுக்கு இந்த கதை ரசிகர்களிடையே எடுபடவில்லை.

Also Read:பாக்யராஜ் பதற பதற அடித்த ஊர்வசி.. குழந்தைத்தனமான நடிப்பில் வெளிவந்த 5 படங்கள்

பாரிஜாதம்: பாக்யராஜ் தன்னுடைய மகள் சரண்யா பாக்கியராஜை தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகப்படுத்த இயக்கிய திரைப்படம் தான் பாரிஜாதம். இந்த படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். பாக்யராஜ் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஆனாலும் இந்த படம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு சரண்யாவும் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

சித்து +2 : பாக்யராஜ் தன்னுடைய மகன் சாந்தனுவை முதன் முதலில் வேட்டிய மடிச்சு கட்டு என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அதன்பின்னர் சக்கரகட்டி என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக சாந்தனு அறிமுகமானார். சாந்தனுவுக்கு வேற எந்த திரைப்படம் அமையாததால் சித்து பிளஸ் டூ என்னும் திரைப்படத்தை மகனுக்காக பாக்யராஜ் இயக்கினார். ஆனால் இந்த படம் படுதோல்வி அடைந்தது.

Also Read:பலமுறை பார்த்தாலும் சலிப்புதட்டாத பாக்யராஜின் 5 படங்கள்.. தியேட்டர்களுக்கு படையெடுக்க வைத்த முருங்கைக்காய் ஸ்பெஷலிஸ்ட்

Trending News