ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

குடும்பத்தின் முன் கோபியை கலாய்க்கும் பழனிச்சாமி.. ஆவேசத்தின் உச்ச கட்டத்தில் ராதிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய சீரியலாக இருக்கிறது. இன்று வருகிற எபிசோடு படி பழனிச்சாமி அவருடைய அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக அனைவரையும் கூப்பிட பாக்கியா வீட்டிற்கு வருகிறார். அங்கே பழனிச்சாமி, பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்து அனைவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் வீட்டிற்கு வரும் கோபி என்ன எல்லாரும் சேர்ந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். நம்ம வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்திருக்கிறார்களா என்று உள்ளே வந்து பார்க்கிறார். அங்கே பழனிச்சாமியை பார்த்து ஷாக் ஆகிறார். பிறகு இவர் எதுவும் சொல்லாமல் மாடிக்கு போகும் போது பழனிச்சாமி இவரைப் பார்த்து கொஞ்சம் நில்லுங்கள் உங்க இஷ்டத்துக்கு நீங்க பேசாம உள்ள வரீங்க சேல்ஸ்மென்ன என்றால் வாசலில் நின்று கூப்பிடுங்கள்.

Also read: குணசேகரனை ஏமாற்றும் ஜனனியின் புதிய திட்டம்.. கதிரின் அடாவடித்தனத்துக்கு சரியான பதிலடி

அதை விட்டுவிட்டு அநாகரிகமாக திறந்து இருக்க வீட்டுக்குள்ள நீங்க எதுவும் சொல்லாமல் வருகிறீர்கள் என்று கேட்க அதிக டென்ஷனில் கோபி ஒன்றுமே சொல்லாமல் மாடிக்கு போய் விடுகிறார். பிறகு பழனிச்சாமி நில்லுங்க நில்லுங்க என்று கூப்பிட அதற்கு உடனே பாக்யாவின் மாமனார் இவர் தான் என்னுடைய பையன் இந்த குழந்தைகளுக்கு அப்பா என்று சொல்கிறார். இதைக் கேட்ட பழனிச்சாமி அப்படியா நான் வேற தவறாக புரிந்து கொண்டு கொஞ்சம் பேசிட்டேன். நான் போய் மன்னிப்பு கேட்டு வருகிறேன் என்று சொல்கிறார்.

பிறகு எல்லாரிடமும் அம்மாவின் பிறந்தநாளுக்கு கண்டிப்பாக நீங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வரவேண்டும். அப்பொழுது தான் என் அம்மா ரொம்பவே சந்தோசமாக இருப்பார் என்று சொல்கிறார். அதற்கு பாக்யாவின், மாமியாரும் மாமனாரும் கண்டிப்பாக நாங்கள் எல்லோரும் வருகிறோம் என்று சொல்லி என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறார். அதற்கு பழனிச்சாமி, பாக்கியா மேடம் தான் அங்கே எல்லாமே சமையல் என்று சொல்கிறார்.

Also read: குணசேகரனுக்கு எதிரான சூழ்ச்சியில் ஒட்டுமொத்த குடும்பம்.. அல்லக்கை கதிருக்கு சரியான ஆப்பு வைக்கும் ஜனனி

இதற்கு இடையில் பாக்கியா மட்டும் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறார். ஏனென்றால் பழனிச்சாமி கோபியை கொஞ்சம் கடுப்பாகும் அளவிற்கு பேசியதால் தான். அடுத்து மாடிக்குப் போன கோபி இவன் யாரு என்ன வந்து சேல்ஸ்மேன் என்று சொல்வதற்கு இவனை யாரு நடு வீட்டில் உட்கார சொல்லி எல்லாரும் பேசிகிட்டு இருக்காங்க என்று கீழே நடந்ததை வைத்து புலம்பித் தவிக்கிறார்.

அடுத்ததாக ராதிகா, கோபியிடம் இனியா மேல மட்டும் தான் உங்களுக்கு பாசம் எல்லாம் அதிகம் என் பொண்ணு உங்களுக்கு இரண்டாம் பட்சம் தானே என்று சொல்லி சண்டை போடுகிறார். உடனே கோபி இனியாவிடம் எப்படி இருக்கணும் என்று எனக்கு தெரியும் அதைப்பற்றி நீ எனக்கு சொல்ல தேவையில்லை என்று கடுமையாக பேசுகிறார். உடனே ராதிகா உங்களுக்காக தான் நான் எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்து இருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு கோபி இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல உனக்கு விருப்பமில்லை என்றால் நீ வீட்டை விட்டு போகலாம் என்று சொல்கிறார். இதை கேட்டு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறார் ராதிகா.

Also read: கொஞ்சநஞ்ச பேச்சா பேசினீங்க ஜீவா.. இப்படி மாமனாரிடம் மாட்டி தவிக்கும் பரிதாபம்

- Advertisement -

Trending News