திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

இயக்குனர் என்பதை மறந்து நடிப்பில் இறங்கிய 5 பிரபலங்கள்.. வில்லனாய் மாறிய கௌதம் மேனன்

ஒரு படம் வெளிவந்து வெற்றி காண்பது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. அவ்வாறு கடுமையாக தன் முழு முயற்சியை போடும் இயக்குனரிடம் தான் இருக்கிறது. மேலும் பல படங்களை இயக்கிய இவர்கள் தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவ்வாறு நடிக்க வரும் இயக்குனர்களுக்கு ஒரு சில படங்களே கை கொடுக்கின்றன. அதற்குப் பின் நடிப்பு வேலைக்காகாது என்று தெரிந்து சினிமா பக்கமே தலை காட்டாமல் போனவர்களும் உண்டு. இந்நிலையில் இயக்குனர் என்பதை மறந்து நடிப்பில் இறங்கிய 5 பிரபலங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: படப்பிடிப்பிலேயே தனுஷை அசிங்கப்படுத்திய வடிவேலு.. ஓவர் ஆட்டத்தால் பறிபோன பட வாய்ப்பு

எஸ் ஜே சூர்யா: துணை இயக்குனராக தன் பயணத்தை ஆரம்பித்த இவர் 1999ல் வாலி என்னும் படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை தந்தவர். அதைத்தொடர்ந்து குஷி, அன்பே ஆருயிரே, புலி, இசை போன்ற படங்களில் இயக்கி உள்ளார். இதற்கிடையே அப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு என்னும் படத்தில் வில்லனாக இடம்பெற்ற இவர் இப்படத்தின் மூலம் நல்ல விமர்சனங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் மேனன்: இவர் ஒரு திரைப்பட இயக்குனர், கதை ஆசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய படங்களில் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதன்பின் நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் சமீபத்தில் வெளிவந்த பத்து தல படத்தில் வில்லனாக களம் இறங்கி இருப்பார் அது இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.

Also Read: நாற்பது நாளில் பல நூறு கோடிக்கு வெளிவேஷம் போடும் அப்பா மகன்.. தளபதியின் ராஜதந்திரம்

மிஷ்கின்: பன்முக திறமைகளை கொண்ட இவர் 2006ல் சித்திரம் பேசுதடி என்னும் படத்தின் மூலம் இயக்கத்தில் ஆர்வம் காட்டினார். அதைத் தொடர்ந்து யுத்தம் செய், முகமூடி, பிசாசு போன்ற திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த படங்களை இயக்கி வந்தார். இதற்கு இடையே தன்னை நடிப்பிலும் ஈடுபடுத்திக் கொண்டார். அதிலும் படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் மூலம் தன்னடிப்பினை வெளிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா: தமிழ் சினிமாவில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு தன் இயக்கத்தின் மூலம் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் பாரதிராஜா. 1977ல் வெளிவந்த 16 வயதினிலே படத்தில் ஆரம்பித்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜா, நிறம் மாறாத பூக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை போன்று பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர். தற்போது சமீப காலமாக நடிப்பில் இறங்கி உள்ளார். மேலும் குறிப்பாக திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு இணையாக நகைச்சுவையில் அசைத்திருப்பார்.

Also Read: ஓடுற குதிரைகளை வளைத்து போடும் கமலஹாசன்.. வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரைகள்

சேரன்: நல்ல கருத்துள்ள குடும்ப படங்களை இயக்குவதில் வல்லவர் இவர். இவரின் எதார்த்தமான கதையால் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஆகியவை விருது பெற்ற படங்கள் ஆகும். இதற்கு இடையே ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் ஆகிய படங்களில் தன்னை நடிகராகவும் நிரூபித்துக் கொண்டவர்.

- Advertisement -

Trending News