திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

உச்சகட்ட அப்செட்டில் மகிழ்திருமேனி.. அஜித்திடம் மாட்டிக் கொண்ட பரிதாபம்

அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சில மாதங்களாக இவருடைய அடுத்த படத்திற்கான எந்தவித அப்டேட்டுக்களுமே தெரியாமல் மிகப்பெரிய குழப்பத்திலேயே இருந்தது. பிறகு ஒரு வழியாக இயக்குனர் மகிழ் திருமேனியை உறுதி செய்து அஜித்தின் பிறந்தநாள் அன்று இவருடைய 62 ஆவது படத்தின் டைட்டிலான விடாமுயற்சி என்று அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இதன்பிறகு அடுத்து சுடச்சுட ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் கிணத்தில் போட்ட கல்லாக அப்படியே இருக்கிறது. அதாவது இவருக்கு சினிமா என்பது இரண்டாம் பட்சம் தான். முதலில் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது இவருடைய குடும்பத்திற்காக. அதன் பின் இவருடைய நீண்ட நாள் கனவாக இருந்தது உலகத்தை சுற்றி வருவது தான். அதிலும் பைக் ரைட் மூலமாக போவது தான் இவருடைய இன்ட்ரஸ்ட்.

Also read: அஜித் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. விடாமுயற்சிக்கு ஆப்பு வைத்த முக்கிய பிரச்சனை

அதனால் தற்போது வரை விடாமுயற்சியின் படத்திற்கு எந்தவித படப்பிடிப்பும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இப்படத்திற்கான முழு ஸ்கிரிப்டையும் கேட்டு மகிழ் திருமேனியை அதிக அளவில் டார்ச்சர் கொடுத்தார். அதனால் அவர் எல்லா ஸ்கிரிப்டையும் தற்போது ரெடி பண்ணி அஜித்திடம் கொடுத்து விட்டார்.

ஆனால் அஜித் அந்த ஸ்கிரிப்டை வாங்கினதோடு சரி இதுவரை எந்தவித பதிலும் சொல்லவும் இல்லை அதை முழுவதுமாக படித்துக் கூட பார்க்கவும் இல்லை. அதற்குள் வேர்ல்ட் டூரை ஆரம்பித்து உலகத்தை சுற்றி வருகிறார். பிறகு அஜித் வேர்ல்ட் டூரை முடித்துவிட்டு வந்து அந்த கதையை படித்த பிறகு என்ன சொல்லப் போகிறாரோ என்று உச்சகட்ட அப்செட்டில் மகிழ்ந்திருமேனி இருக்கிறார்.

Also read: திரையில் பாக்யராஜ் கற்றுக் கொடுத்த 5 ரகசியமான விஷயங்கள்.. துணிவு அஜித்திற்கு டப் கொடுத்த ‘ருத்ரா’

பாவம் அஜித்திடம் மாட்டிக் கொண்டு மகிழ் திருமேனி முழித்து வருகிறார். இதற்குப் பிறகு அவர் முழு ஸ்கிரிப்டையும் படித்த பின் இன்னும் இரு தினங்களில் அதாவது மே 22 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று முடிவெடுத்தனர். ஆனால் அது குறித்து இதுவரை இன்னும் எந்த தகவல்களும் வெளிவரவில்லை. அத்துடன் அஜித், இப்படத்திற்கு வெறும் 40 நாள் கால்ஷீட் மட்டும் தான் கொடுத்திருக்கிறார்.

ஏனென்றால் இந்த 40 நாட்களுக்குள் விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு இவருடைய அடுத்த வேர்ல்ட் டூரை தொடங்க இருக்கிறார். ஆனால் தற்போது வரை அஜித் வேர்ல்ட் டூரை  முடித்து வராததால் இவர் சொன்ன பிளான் படி படபிடிப்பு நடக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது. ஏற்கனவே இழுத்து அடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு இன்னும் எத்தனை மாதங்கள் ஆகின்றதோ. அஜித் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது.

Also read: அஜித்தின் அந்த படம் மாதிரி சஸ்பென்ஸ், திரில்லர் வேணும்.. விஜய் கண்டிஷனுக்கு தலையாட்டிய வெங்கட் பிரபு

- Advertisement -

Trending News