நடிகராக பேமஸானாரோ இல்லையோ இப்போது யூடியூபராக பயங்கர பிரபலமானவர்தான் பயில்வான் ரங்கநாதன். இவர் பொதுவாகவே நடிகர் நடிகைகளின் குறை சொல்வார். இறந்த பிரபலங்களை கூட விட்டு வைக்காத பயில்வான் அவர்களது மறைவுக்கு பின்பும் ஏதாவது குறையை கண்டிப்பாக சொல்வார்.
அதுமட்டுமல்ல முன்னணி நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையையும் அக்குவேறு ஆணிவேராக பிரித்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்படி திரை பிரபலங்களை மென்று தின்று கொண்டிருக்கும் பயில்வான் முதல் முதலாக கண்கலங்கி இருக்கும் வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த சரத்பாபு பற்றி பேசி இருந்தார். இதுவரை குறை சொன்ன பயில்வான் சரத்பாபு பற்றி ஒரு வார்த்தை கூட குறை சொல்லவில்லை. அவரைப் பற்றி பேசும்பொழுது வீடியோவில் அழுதுவிட்டார் பயில்வான். இதுவரை இவர் ஒரு நடிகருக்காக பேசும் பொழுது அழுதது இதுவே முதன்முறை.
அந்த அளவிற்கு சரத்பாபு நல்ல முறையில் வாழ்ந்திருக்கிறார். அந்த வாழ்ந்த முறையை இவர் கூறினார். சரத்பாபுவை வைத்து படம் கூட தயாரித்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அந்த படத்தின் பெயர் அழகிய கண்ணே. படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியவர்
இயக்குனர் மகேந்திரன்.
1982 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சரத்பாபு கதாநாயகனாகவும் குழந்தை அஞ்சு கதாநாயகியாகவும் நடித்தனர். இதில் சரத்பாபு பிரசன்னாவாக தன்னுடைய மிக எதார்த்தமான நடிப்பை வெளிகாட்டி திரையரங்கில் ரசிகர்களிடம் கைதட்டுகளை வாங்கி குவித்தார். மேலும் இந்த படத்தின் மூலம் தான் சரத்பாபுவின் அறிமுகம் பயில்வானுக்கு கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் இவர் எந்த அளவுக்கு சார்ந்ததாக இருக்கிறாரோ, அதேபோல் தான் அவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் சாந்தமானவர். அதுமட்டுமல்ல தயாரிப்பாளர்களின் மனதை அறிந்து சம்பளத்தை உயர்த்தாமல் நியாயமாக நடந்து கொள்ளும் ஜென்டில்மேன் என பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த வீடியோவில் சரத்பாபுவை குறித்து உருக்கமாக பேசி கண் கலங்கினார்.