சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது குணசேகரன் நினைத்தபடி ஜெயிக்கப் போகிறாரா அல்லது இவரை தோற்கடிக்கும் படலத்தில் அந்த வீட்டின் மருமகள் அனைவரும் இறங்கிய முயற்சியில் வெற்றி கிடைக்குமா என்பதை விறுவிறுப்பாக கொண்டு வருகிறது. இதற்கிடையில் அப்பத்தா சொன்ன அந்த ஜீவானந்தம் என்ன ஆச்சு என்று தெரியாமல் அனைவரும் சுற்றி வருகிறார்கள்.
எஸ் கே ஆர் குடும்பத்தில் உள்ளவர்கள் அருணை, குணசேகரன் குடும்பம் தான் கடத்தி வைத்திருக்கிறது என்று ஒரு பக்கம் நினைக்க, மற்றொரு பக்கம் குணசேகரனும் கதிரும் எஸ் கே ஆர் குடும்பத்துடன் சேர்ந்து இந்த வீட்டின் மருமகள்கள் அருணை வைத்து ஏதோ கேம் விளையாடுறாங்க என்று மாற்றி மாற்றி தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
Also read: இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசை பட்டா இப்படித்தான்.. ஐஸ்வர்யாவை உருட்டி எடுத்த முல்லை
தற்போது அருணை கண்டுபிடிக்கும் படலத்தில் அனைவரும் மும்மரமாக இறங்கி உள்ளார்கள். ஆனால் இந்த இடத்தில் கௌதம் அருணை சரியான முறையில் பாதுகாத்து வேறொரு இடத்திற்கு மாற்றிவிட்டார். இதற்கிடையில் பாவம் கரிகாலன் அரசு விடம் மாட்டி சின்ன பின்னமாக ஆகிவிட்டார். இந்த மொத்த அடியையும் கதிர் வாங்கி இருந்தால் இன்னும் பார்க்க ஆனந்தமாகவும் இருந்திருக்கும்.
அடுத்ததாக குணசேகரன், பாசத்தின் ட்ராமாவை வைத்து ஞானத்தை எப்படியாவது தன் பக்கம் மடக்கி விட வேண்டும் என்று கொக்கி போட்டார். இதை கேட்ட ஞானம் இந்தப் பக்கமும் இல்லாம அவங்க பக்கமும் இல்லாம தத்தி மாறி இருக்கிறார். பிறகு இவனை வைத்து வேலைக்காகாது என்று முடிவெடுத்த குணசேகரன் அவர் வழக்கமாக போடும் மாநாட்டை ஆரம்பித்து எல்லாரிடமும் உறுதியாக சொல்கிறேன் நாளையிலிருந்து என்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்க போகிறேன் அதற்கு தயாராக இருங்கள் என்று சொல்லி விடுகிறார்.
Also read: ரெண்டு பொண்டாட்டி வாழ்க்கையில் படாத பாடுபடும் கோபி.. இப்போ ராதிகா நிலைமை என்ன
ஏதோ பெரிய தில்லாலங்கடி வேலையை ஆரம்பிக்கப் போகிறார் மட்டும் தெரிகிறது. இவர் என்னதான் பண்ணினாலும் கடைசியில் மக்கு ஆதிரைக்கும் அருணுக்கும் தான் திருமணம் நடக்கப் போகிறது. இதற்கிடையில் எல்லாத்துக்கும் பலிக்காடாக மாட்டி முழிக்கும் கரிகாலன் கையில் தற்போது மாவு கெட்டு போடும் படியாக ஆகிவிட்டது.
இதை பார்த்த ஜான்சி ராணி என் பையன் கைய ஒடச்ச அந்த எஸ்கேஆர் குடும்பத்தை ஒரு வழி பண்ணாம விட மாட்டேன் என்று கோபத்தின் உச்சகட்டமாக பேசுகிறார். குணசேகரன் தான் படிக்காத முட்டாள் என்று நினைத்தால் எஸ் கே ஆர் குடும்பமும் படித்த முட்டாள் என்று நிரூபிக்கிறது. பிரச்சினைக்கு யார் காரணமோ அவங்கள விட்டுட்டு புள்ள பூச்சியை போய் சீண்டிகிட்டு இருக்கு.
Also read: என்ன நடிப்பு? நீலி கண்ணீர் வடிக்கும் குணசேகரன்.. கரிகாலனை பதம் பார்த்த சக்தி