பணத்தாசை, எல்லை மீறிய கவர்ச்சி.. அரசனை நம்பி புருசனை கைவிட்ட விஜய் பட நடிகை

முன்பெல்லாம் கிளாமராக நடிப்பதற்கும், ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்காகவே நடிகைகள் இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிடையாது. டாப் ஹீரோயின்களே கிளாமர் களத்தில் குதித்து விடுகிறார்கள். அப்படித்தான் விஜய் பட நடிகை ஒருவரும் பணத்தாசையால் எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்து வந்தார்.

ஆனால் இப்போது அதுவே அவருக்கு ஆப்பாக முடிந்திருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் தமிழன் படத்தில் அவருடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் உலக அழகி பிரியங்கா சோப்ரா. அதை தொடர்ந்து பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த அவர் பணத்தாசையால் ஹாலிவுட் பக்கம் நடையை கட்டினார்.

அங்கு போனதுமே இவர் ஓவராக சீன் போட்டு நான் ஹாலிவுட் நடிகையாக்கும் என சொல்லாமல் சொல்லி வந்தார். ஆனால் அங்கு அவருக்கு கிடைத்ததோ வில்லி ரோல்களும், கிளாமர் கேரக்டர்களும் தான். அதிலும் சமீபத்தில் அவர் நடித்துள்ள வெப் சீரிஸ் ஒன்றில் அம்மணி எல்லை மீறிய கவர்ச்சியில் ரணகளம் செய்திருந்தார்.

ஆனாலும் அங்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் ஹிந்தி பக்கமே திரும்பலாம் என்று நினைத்திருந்த பிரியங்காவுக்கு அதிர்ச்சி தான் கிடைத்தது. ஏனென்றால் அந்த மாதிரி காட்சிகளில் எல்லாம் நடித்தவரை டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக எப்படி நடிக்க வைப்பது என்று சிலர் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றனர்.

அந்த ஏமாற்றத்தால் தான் தற்போது அவர் பாலிவுட் இயக்குனர் மீது இல்லாத கதையெல்லாம் கட்டி வருகிறாராம். உள்ளாடையுடன் போஸ் கொடுக்க சொன்னதுக்கே இப்படி கொந்தளித்து போகும் இவருக்கு ஹாலிவுட்டில் அது கூட இல்லாமல் நடித்தது மறந்து விட்டதா என பலரும் வெளிப்படையாகவே அவரை கலாய்த்து வருகின்றனர்.

ஆக மொத்தம் பிரியங்கா சோப்ரா வாய்ப்பு இல்லாத சூழலில் தான் இப்படி அலப்பறை செய்து வருகிறார். இப்படி பரபரப்பை கிளப்பியாவது வாய்ப்பு பிடிக்கலாம் என்று நினைத்தால் அதுவும் அவருக்கு பின்னடைவாக முடிந்திருக்கிறது. அந்த வகையில் இவர் கூறிய குற்றச்சாட்டுகள் பாலிவுட்டில் அதிர்வலையை கிளப்பி அவருக்கு கிடைக்க இருந்த வாய்ப்பையும் தட்டி விட்டுள்ளது. இவ்வாறு அவர் அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலையில் இருக்கிறார்.