ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் அர்ஜுன்.. லியோ படத்தில் மொத்தமாக மாறிய சம்பவம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது.

மேலும் வருகின்ற அக்டோபர் மாதம் லியோ படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் விஜய்க்கு வில்லனாக இந்த படத்தில் ஆறு முதல் ஏழு நபர்கள் நடிக்க இருக்கிறார்கள். அதில் முக்கியமாக அர்ஜுன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயல்பாகவே அர்ஜுன் ஓவர் ஆட்டிட்யூட் காட்டக்கூடியவராம்.

Also Read : விஜய், அஜித் சினிமாவை விட்டுப் போகணும்னு ஆசைப்படும் 5 நடிகர்கள்.. ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏங்கும் தங்கலான்

யாருக்கும் அவ்வளவு எளிதில் அடங்கி போக மாட்டாராம். எப்படிப்பட்ட இயக்குனார்களாக இருந்தாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தான் கூறுவாராம். ஆனால் லியோ படத்தில் மொத்தமாக உருமாறி இருக்கிறாராம். தற்சமயம் விஜய்க்கும், அர்ஜுனுக்கும் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்போது செட்டில் அர்ஜுன் செய்யும் செயல்கள் யாரும் இதுவரை பார்க்காதது போல் உள்ளதாம். ஏனென்றால் இருக்கிற இடம் கூட தெரியாமல் அர்ஜுன் இருந்து வருகிறாராம். அந்த அளவுக்கு அமைதியாகவும், அடக்கமாகவும் இருக்கிறாராம். இதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறதாம்.

Also Read : விஜய் படம் என்ற தெனாவெட்டில் இருந்த வெங்கட் பிரபு.. கஸ்டடியால் ஒரே அடியாய் கவிழ்த்து விட்ட AGS

அதாவது மற்ற நடிகர்கள் படம் என்றால் ஆட்டிட்யூட் காட்டும் அர்ஜுன் தளபதி விஜய் படம் என்பதால் வாயை மூடி அமைதியாக இருக்கிறாராம். அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் மற்ற நடிகர்களின் அறிவுறுத்தலின் படி காட்சிகளை எடுக்க மாட்டார். அவர் மனதில் என்ன நினைத்தாரோ அதை மட்டுமே எடுக்கக்கூடியவர்.

இதனால் அர்ஜுனின் ஆதிக்கம் லியோ படத்தில் செல்லுபடி ஆகாது என்பது அவருக்கே தெரியும். ஆகையால் எதுவும் செய்யாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என லியோ படபிடிப்பில் அர்ஜுன் வந்து செல்கிறாராம். இவ்வளவு பெரிய சிலுவையே விஜய் அடக்கி வைத்துள்ளார்.

Also Read : விஜய்யை நம்ப வைத்து கழுத்தறுத்த இயக்குனர்.. கேஜிஎஃப் நடிகரை வைத்து காய் நகர்த்தும் சன் பிக்சர்ஸ்

Trending News