திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

இனியா மூலம் ராதிகாவிற்கு வரும் ஆப்பு.. கோபி எடுக்கப் போகும் முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் தற்போது பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கிறது. கோபி ராதிகாவிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு பட்டு வருகிறார். இதே நிலைமை தான் கோபியிடம் பாக்கியா இருக்கும்போது ஒவ்வொரு நாளும் இதை போல தான் பாக்கியா ரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.

கோபியை விட்டு  பாக்கியா போனதுக்கு அப்புறம் தான் அவரோட வாழ்க்கையை வாழவே ஆரம்பித்தார். அதனால் கோபி இல்லாத குறையே இல்லாமல் பாக்கியா சந்தோசமாகத்தான் இருக்கிறார். ஆனால் பாவம் கோபியின் நிலைமை தான் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இவர் என்னதான் நெகடிவ் ஆக கேரக்டராக இருந்தாலும் இவரை திட்டும் அளவிற்கு யாருக்கும் மனம் வராது.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸில் அக்காவால் சீரியலில் இருந்து விலகும் பிரபலம்.. பேட்டியில் சொன்ன அதிர்ச்சி காரணம்

அந்த அளவிற்கு தான் இவருடைய நடிப்பு ஹைலைட்டாக தூக்கி விடுகிறது. தற்போது கோபியின் தலைவலியை புரிந்து கொண்டு இவருடைய அப்பா பாக்கியாவிடம் யாரோ ஒருவருக்கு உதவி பண்ணுகிற எண்ணத்தில் காபி போட்டு கொடு என்று சொல்கிறார். பாக்கியம் மாமனார் சொன்னதற்காக காபி போடுகிறார்.

பிறகு இதை எடுத்துட்டு வந்து கோபியிடம் கொடுக்கும் அந்த சரியான நேரத்தில் ராதிகா என்டரி கொடுக்கிறார். இதை எதிர்பார்க்காத கோபி ஏதோ பேய் பார்த்து பயந்தது போல் அருண்டு விடுகிறார். அத்துடன் நான் ஏதும் கேட்கலை எனக்கு காபியே வேண்டாம் என்று பயத்தில் போய்விடுகிறார்.

Also read: கோபியை தண்ணி தெளித்து விட்ட பாக்கியா.. ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்கும் ராதிகா

உடனே ராதிகா, பாக்கியாவிடம் காபியை கொடுத்து அவரை உஷார் பண்ணலாம் என்று நினைக்கிறீர்களா என்று கேட்கிறார். அதற்கு நான் ஏன் அப்படி பண்ண வேண்டும் அவர் வேண்டாம் என்று தான் விவாகரத்தை கொடுத்து விட்டேன். அதன் பிறகு இனிமேல் அப்படி ஒரு எண்ணம் எனக்கு வராது என்று சொல்கிறார்.

அடுத்ததாக இனியா ஸ்பெஷல் கிளாஸ் போவதற்கு டைம் ஆகிவிட்டது என்று சொல்ல உடனே கோபி நான் ஆபீஸ்க்கு கிளம்பி விட்டேன். போகும்போது உன்னை விட்டு விடுகிறேன் என்று இனியாவை கூப்பிட்டு காரில் கிளம்பி விடுகிறார். அப்படியே இரண்டு பேரும் பேசும்போது இனியா இனிமேல் குடிக்காதிங்க தயவு செய்து எனக்காக என்று சொல்கிறார்.

அத்துடன் இந்த ராதிகா ஆன்ட்டி உங்களுக்கு வேண்டாம். அதற்கு அப்புறம் தான் நீங்கள் இப்படி மொத்தமாக மாறிவிட்டீர்கள் என்று சொல்கிறார். இதை கேட்ட கோபி ஷாக் ஆகி இருக்கிறார். அன்பு மகளுக்காக கோபி இனி எடுக்க போகும் முடிவு என்னவாக இருக்கும்.

Also read: கதை இல்லாமல் மட்டமாக உருட்டும் ஜீ தமிழ் சீரியல்.. காரி துப்பும் கார்த்திகை தீபம்

- Advertisement -

Trending News