சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஆதிரை திருமணத்தை தவிர மற்றதெல்லாம் பார்க்க விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் ஜனனி கமுக்கமாக இருந்து குணசேகரனுக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு வேலையும் அவருக்கே தெரியாமல் அவருடைய கனவு கோட்டை சுக்கு நூறாக உடைய போகிறது.
இதனால் குணசேகரன் மட்டுமல்ல இவருக்கு அல்ல கையாக இருக்கும் கதிரின் ஆட்டமும் அடங்கப் போகிறது. அதாவது குணசேகரன் அப்பத்தாவிடம் இருந்து வாங்கின கையெழுத்தை விட இன்னும் ஸ்ட்ராங்காக அவருடைய கைநாட்டும் தேவைப்படுகிறது என்று இவருடைய ஆடிட்டர் சொல்கிறார்.
இதனால் குணசேகரன் ஆதிரை திருமணத்திற்கு நாங்க எல்லாரும் மண்டபத்துக்கு போன பிறகு நீங்க வந்து அப்பத்தாவிடம் எங்கு கைநாட்டு வைக்கணுமோ அதை வாங்கிக்கோங்க என்று சொல்லிவிடுகிறார். ஆனால் இவர் செய்யும் சூழ்ச்சிக்கு எதிராக ஜனனி அப்பத்தாவின் ரூமில் சிசிடிவி கேமராவை யாருக்கும் தெரியாமல் வைத்து விடுகிறார்.
இதன் மூலமாக கண்டிப்பாக குணசேகரன் சிக்குவது உறுதியாகிவிட்டது. அடுத்ததாக அப்பத்தா சொன்ன ஜீவானந்தத்தை கண்டுபிடிப்பதற்கு ஜனனி நிச்சயதார்த்த மண்டபத்திற்கு சென்று அப்பத்தாவின் போனை கைப்பற்றி விட்டார். அதில் ஜீவானந்தம் என்ற பெயர் ஏதாவது இருக்கிறதா என்று செக் பண்ணி பார்க்கிறார்.
ஆனால் அதில் எதுவும் அந்தப் பெயர் குறிப்பிடவில்லை என்பதால் ஏதாவது ஷார்ட் ஃபார்ம் இருக்கிறதா என்று கண்டுபிடித்து கடைசியில் ஒரு நம்பரை நம்பி அதற்கு டயல் பண்ணுகிறார். அந்த போனை எடுப்பது கண்டிப்பாக ஜீவானந்தத்தின் செகரட்டரி ஆக தான் இருக்கப் போகிறது. இதன் மூலம் அப்பத்தா, குணசேகரனுக்கு 40% சொத்தில் வைத்திருக்கும் ஆப்பு வெளிவரப் போகிறது.
அடுத்ததாக கரிகாலன் கையை அரசு உடைத்ததற்காக ஜான்சி ராணி ஆவேசமாக குணசேகரன் வீட்டிற்கு வந்து சொல்கிறார். ஆனாலும் குணசேகரன் அவர் குணத்தை மாற்ற முடியுமா. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று கரிகாலன் கையை உடைத்து அதன் மூலம் அவருடைய கையை சரி பண்ணி விடுகிறார். எப்படி இருந்தாலும் குணசேகரின் கனவு கோட்டை இடியப்போகிறது.