வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

குணசேகரனின் சூழ்ச்சிக்கு போடும் முட்டுக்கட்டை.. ஜனனிக்கு நிழலாய் நிற்கப்போகும் ஜீவானந்தம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து இப்பொழுது வரை ஒரு எபிசோடும் மிஸ் பண்ணாமல் தீவிரமாக பார்த்து வரும் ரசிகர்கள் ஏராளமானவர். தற்போது குணசேகரின் ஆட்டம் சறுக்கிக் கொண்டே வருகிறது என்றே சொல்லலாம். எப்பொழுது ஜனனி இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தாலோ அப்பொழுதே குணசேகரனுக்கு கெட்ட நேரம் ஆரம்பமாகிவிட்டது.

அந்த வகையில் குணசேகரன் செய்யும் ஒவ்வொரு சூழ்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக ஜனனியின் செயல்கள் இருந்து வருகிறது. மேலும் அப்பத்தா கோமா ஸ்டேஜ்க்கு போன பிறகு கண் விழிக்கும் ஒவ்வொரு நேரமும் ஜீவானந்தம் என்ற பெயரை மட்டும் உச்சரித்து வந்தார். அதனால் இவரை கண்டுபிடிக்கும் படலமாக ஜனனி களத்தில் இறங்கி அப்பத்தாவின் போனை கண்டுபிடித்து ஜீவானந்தத்தை கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்.

Also read: பழனிச்சாமியை தேடி வீட்டிற்கு போகும் கோபியின் குடும்பம்.. திருமணத்துக்கு பொறுப்பேற்கும் பாக்கியா

ஆனால் அங்கு தான் ட்விஸ்ட்டுக்கு மேல ட்விஸ்டாக கதை நகர்ந்து வருகிறது. ஜீவானந்தம் யார் எப்படிப்பட்டவர் நல்லவரா கெட்டவரா, இவர் ஜனனிக்கு நிழலாக இருந்து உதவி செய்வாரா என்று பல கேள்விகளை எழுப்புகிறது. அடுத்தபடியாக கௌதம் மற்றும் ஜீவானந்தத்திற்கு என்ன தொடர்பு என்று யோசித்தால் தலையே சுற்றுகிறது.

அதிலும் ஜீவானந்தத்தின் செக்ரட்டரி பேசியதை பார்க்கும்போது புரியாத புதிராக மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இவர் கௌதமுக்கு போன் பண்ணி பணக்காரர்கள் லிஸ்ட் எடுத்து அதன்படி எல்லாம் சுமுகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்று கேட்க அதற்கு அவரும் நான் எல்லாத்தையும் பக்கவாக பிளான் பண்ணி காய் நகர்த்தி வருகிறேன் என்று சொல்கிறார். மேலும் எதற்காக கௌதம் போலீஸிடம் இருந்து தலைமறைவாக இருக்கிறார் என்பது தெரியவில்லை.

Also read: கோபியை கதற கதற கலாய்த்த ஒட்டுமொத்த குடும்பம்.. அல்டிமேட் நக்கல் நையாண்டி

ஆக மொத்தத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம் வருகிற எபிசோடில் நடக்க இருக்கிறது. அதாவது எஸ் கே ஆர் பரம்பரை பணக்காரர் இவரை ஏதோ மடக்க வேண்டும் என்பதற்காகத் தான் கௌதம் கொஞ்ச நாளாக இவர்களிடம் வேலை பார்த்து இருக்கிறார். இவர்களைப் பற்றி ஏதோ ஒரு பெரிய விஷயத்தை தெரிந்த பின்பு வெளியேறிவிட்டார். அதற்கேற்ற மாதிரி அருண் தற்போது கௌதம் கஸ்டடியில் இருக்கிறார்.

இதை வைத்து இன்னும் என்னெல்லாம் நடக்க இருக்கிறதோ. குணசேகரனை விட ஜீவானந்தம் பெரிய தில்லாலங்கடியாக இருப்பாரோ என்று தோன்றுகிறது. எது எப்படியோ எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பவர்களுக்கு போரடிக்காத மாதிரி விறுவிறுப்பாக கதை அமைந்து வருகிறதால் இந்த நாடகம் தான் தற்போது பெஸ்ட் சீரியல் ஆக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. பொருத்திருந்து பார்க்கலாம் என்ன திருப்பங்கள் வர இருக்கிறது என்று.

Also read: பாசமழையை பொழியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள்.. இதையும் வீடியோ எடுத்துப் போடும் ஐஸ்வர்யா

- Advertisement -

Trending News