செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காத அஜித்.. கஷ்டப்படும் நேரத்தில் தூண் போல் நிற்கும் ஏகே

அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு அடுத்த படமான விடாமுயற்சி என்கிற படத்தின் டைட்டில் மட்டுமே வெளியிட்டு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்று யாருக்கும் தெரியாத நிலையில் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதனால் அடுத்த கட்டத்திற்கு போக முடியாமல் அஜித் மௌனம் காத்து வந்தார். பொதுவாகவே அஜித் மற்ற நடிகர்களுக்கு ஒரு உதாரணமாய் இருந்து வருகிறவர். இவர் செய்யும் பல நல்ல விஷயங்கள் வெளியில் தெரியாமல் ஏழை எளியவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். சினிமாவிலும் நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் என்று நிரூபித்து காட்டுகிறார்.

Also read: பல கெட்டப்பில் வெற்றி கண்ட 5 நடிகர்கள்.. இன்றுவரை அஜித் பெயரை காப்பாற்றும் மாஸ் கதாபாத்திரம்

அப்படிப்பட்ட இவர் அவருடைய நெருங்கிய நண்பர், பழகிய ஒருவருக்கு கஷ்டம் என்றால் அப்படியே விட்டுக் கொடுத்து விடுவாரா என்ன. ஆம் இப்பொழுது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் லைக்கா நிறுவனம் பண பிரச்சனையால் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார்கள்.

அதனால் தான் படம் அடுத்த கட்டத்திற்கு போக முடியாமல், இதில் நடிக்கும் ஆர்டிஸ்ட்களுக்கு சம்பளத்தையும் கொடுக்க முடியாமல் படபிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது. இப்படியே நீண்டால் அஜித் இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து கூடிய விரைவில் விலகி விடுவார் என்றெல்லாம் கட்டுக்கதைகள் வெளிவந்தன.

Also read: மோடியின் நண்பருடன் கைகோர்த்த மறைமுகமாக அஜித் செய்யும் வேலை.. ஆச்சரியத்தில் திரையுலகம்

ஆனால் அஜித் அப்படி எதுவுமே செய்யவில்லை. அதற்கு மாறாக லைக்கா நிறுவனத்தின் சுபாஷ் கரனுடன் தூணாக இருந்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் அவர்கள் கஷ்டத்தில் இருக்கும் அந்த நேரத்தில் நான் உங்களுக்கு துணையாக இருக்கிறேன் என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

அதாவது சும்மா பேச்சு வார்த்தையாக இல்லாமல் இப்பொழுது படப்பிடிப்பு ஆரம்பிக்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை. இன்னும் ஓரிரு மாதங்கள் கழித்து கூட நாம் இந்த படத்தை பண்ணலாம் என்று சொல்லி விடாப்பிடியாக விடாமுயற்சி படத்தை தூக்கி நிறுத்துகிறார். சினிமாவில் நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை நல்ல காலம் தான் என்று சினிமா பிரபலங்கள் பலரும் இவரை பற்றி பெருமையாக பேசி வருகிறார்கள்.

Also read: 5 கோடி கடன் இருந்த போதும் அப்படி நடிக்க மாட்டேன்.. வீடு தேடி வந்த 2 கோடி பணத்தை தூக்கி எறிந்த அஜித்

Trending News