கேப்டன் படத்திற்கு பிறகு ஆர்யா அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் நடித்த ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் இன்று உலகெங்கும் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை ட்விட்டர் ரிவ்யூ மூலம் பார்ப்போம்.
முத்தையா சினிமாடிக் யுனிவர்சில் குட்டி புலி, கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, விருமன் இந்த லிஸ்டில் இப்போது காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படமும் சேர்ந்துள்ளது. கிராமத்துக் கதை களத்துடன் கதாநாயகனை கிராமத்தானாகவே காட்டக் கூடியவர் தான் முத்தையா. எல்சியு எல்லாம் இப்ப வந்தது, இதற்கு முன்பே எம்சியு என்ற ‘முத்தையா சினிமாடிக் யுனிவர்சில்’ எல்லாம் எப்பயோ வந்துவிட்டது.
Also Read: ஜூன் மாத ரிலீசுக்கு காத்திருக்கும் 7 படங்கள்.. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வரும் மாமன்னன்
முத்தையா இதுவரை கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். அந்த படங்கள் எல்லாம் ஒரே மாதிரியான கிராமத்து கதைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் காதர் பாட்ஷா படத்தில் முதன் முதலாக ஆர்யாவை ஒரு பக்கா கிராமத்தானாக பார்ப்பதற்கு மாசாகவே இருக்கிறது. படத்தில் இவர் ஒவ்வொரு முறையும் எதிரிகளை தரையில் போட்டு காலால் மிதிப்பது மட்டுமின்றி கோபத்தில் வேட்டியையும் பறக்க விடுவது கொல மாஸ்.
படத்தில் ஜிவி பிரகாஷின் பிஜிஎம் மற்றும் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறது. இந்த படத்தில் நிறைய கேரக்டர்களை முத்தையா பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் ஆர்யா மற்றும் பிரபுவின் நடிப்பு மிகச் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. இதில் 8 முரட்டுத்தனமான சண்டைக் காட்சிகள் மற்றும் 2 பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதில் ‘கறி குழம்பு வாசம்’ என்ற பாடல் அனைவரையும் முணுமுணுக்க வைத்துள்ளது.
Also Read: சூப்பர் ஸ்டாரை வைத்து கல்லா கட்ட பாக்குறீங்களா ஆர்யா? ஓப்பனாக பதிலடி கொடுத்த காதர் பாட்சா
மேலும் இந்த படத்தின் முதல் பாதி ரொம்பவே போரடித்திருக்கிறது. இரண்டாம் பாதி ஓரளவு பார்க்கக் கூடியதாக உள்ளது. இந்த படத்தில் முதல் முதலாக ஆர்யா ரூரல் ஆக்சன் ஹீரோவாக நடித்திருப்பதே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. மேலும் இந்தப் படத்த பாத்துக்கிட்டே இருக்கும் போது ஏதோ டிவி சீரியலை பார்ப்பது போலவே ஒரு எண்ணம் தோன்றுகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற எமோஷன் காட்சிகள் ரொம்ப நீளமாக இருந்தது மட்டுமல்லாமல் ரசிகர்களை அதற்குள் கொண்டு செல்வதற்கு வற்புறுத்தி உள்ளனர்.
இருப்பினும் ஆர்யா மற்றும் கண்ணுக்குழி அழகி சித்தி இத்னானி உடனான காதல் காட்சிகள் ரொம்பவே எதார்த்தமானதாக அமைந்துள்ளது. தற்போது கோடை விடுமுறையில் இருப்பவர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும். சீரியலில் எப்படி செண்டிமெண்ட், அழுகை, காதல் என அனைத்தும் இருக்கிறதோ, அதேபோல காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்திலும் இருப்பதால் இந்த படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
Also Read: பருத்திவீரனைப் போல் களம் இறங்கும் ஆர்யா.. கதை செல்லும் போதே கண்ணீர் விட்டு அழுத சம்பவம்