திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நம்பி மோசம் போன மணிரத்தினம்.. யானைக்கும் அடிசறுக்கும் என அமைந்த 5 மோசமான படங்கள்

தமிழ் திரையுலகில் 1980-களில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், நகர்ப்புற வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக் கொண்டு சொல்வது தான் மணிரத்னத்தின் திரைப்படங்கள். நுட்ப முறையாக கொண்டு சிறப்பான திரைக்கதையம்சம், நேர்த்தியான தொழில்நுட்பம் மற்றும் ரத்ன சுருக்கமான வசன அமைப்பு கட்டாயம் இவர் படங்களில் காணப்படும்.  அப்படிப்பட்ட சிறந்த இயக்குனரான மணிரத்னத்திற்கே ஆனைக்கும் அடிச்சறுக்கும் என்பதுபோல் அமைந்த 5 படங்கள் உள்ளது.

காற்று வெளியிடை: ராணுவத்தில் ஃபைட்டர் பைலட் கார்த்தி, காஷ்மீர் ஸ்ரீநகர் மருத்துவமனை மருத்துவராக அதிதி ராவ் நடித்த படம் காற்று வெளியிடை. முதல் பார்வை காதல், முதல் சந்திப்பிலேயே டேட்டிங் அழைப்பு, ரிஜிஸ்டர் ஆபிஸ், கல்யாணத்துக்கு முன் கர்ப்பம், பிரிந்த காதலியைத் தேடும் பயணம் என வழக்கமான மணிரத்னத்தின் அக்மார்க் நிகழ்வுகளே இந்திய எல்லைப் பகுதியிலும் நிகழ்கிறது. ஃபைட்டர் பைலட்டாக வரும் கார்த்தி பேசிக் கொண்டே இருப்பார். அட மணிரத்தினம் படத்தில் இவ்வளவு வசனங்களா? பொறிந்து தள்ளியிருப்பார் கார்த்தி.

Also Read: வசூல் சாதனையில் முதல் 5 இடத்தை பிடித்த படங்கள்.. பல வருட ரெக்கார்டை முறியடித்த மணிரத்தினம்

கடல்: பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை ஜோடி கார்த்திக், ராதா வாரிசுகள் கவுதம் கார்த்திக், துளசி நாயர் நடித்த படம் 2013 ல் வெளியானது. இப்படத்தின் திரை மொழியும், சில பல காட்சியமைப்புகளும் டெக்னிக்களாக ஹாலிவுட் தரத்திற்கு இருந்தாலும் புரியாத புதிர் சமாச்சாரங்கள் படத்திற்கு பெரிய மைனஸ். சாத்தான் அர்ஜுனுக்கும், தேவதூதன் அரவிந்த்சாமிக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் கதை, இதை இழு இழு வென இழுத்துருப்பார் மணி. இந்த படத்தின் கதை, வசனம் ஜெயமோகன் எழுதி இருப்பார். இவர் காலில் கல்லைக்கட்டிக்கொண்டு மணிரத்னத்தையும் இறுகப்பிடித்துக்கொண்டு கடலில் குதித்திருக்கிருக்கிறார்.

ஆய்த எழுத்து: 2004ல் நடிகர்கள் சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகியோர் நடித்த படம் ஆய்த எழுத்து. நிகழ்கால தேர்தல், அரசியலைக் கண்டு மாணவர்கள் ஒதுங்கிவிடக்கூடாது. அதில் பங்கேற்று, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் கதை. இந்த படத்தில் கதை, திரைக்கதை கதாப்பாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இப்படம் இல்லாததால் வெற்றி பெறவில்லை. அரசியல் பழகனும் இளைஞர்களே என்றது ஆய்த எழுத்து.

Also Read: மாஸ் ஹீரோக்களை வைத்து மணிரத்தினம் வெற்றி கண்ட 5 படங்கள்.. இன்று வரை பெயர் சொல்லும் தளபதி

இருவர்: நிஜக்கதைகளை படமாக்குகிறேன் என்ற பைத்தியம் மணிரத்தினத்திற்கு பிடித்ததால் வந்த இன்னொரு மிக சுமாரான படம் இருவர். எம்.ஜி.ஆர்., கருணாநிதி என்ற இரு பெரும் தலைவர்களை பற்றி படம் எடுக்கும்போது, யாரையும் குறைத்து காட்ட இயலாது. அதிலும் ஒருவர் உயிரோடு இருக்கிறார். 1997 -ல் வெளியாகியது இப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. கதை புரிந்ததும் எந்த நடிகர்களும் நடிக்க முன்வரவில்லை. மோகன்லால், பிரகாஷ்ராஜ் வைத்து விஷப்பரீட்சை நடத்தி கையை சுட்டுக்கொண்டார் மணிரத்னம்.

செக்கச்சிவந்த வானம் : தமிழில் முன்னனி நடிகர்களான சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் அரவிந்தசாமி ஆகியோரை வைத்து செக்கச்சிவந்த வானம் என்ற படத்தினை 2018-ல் இயக்கினார். ஒரு கேங்ஸ்டர் குடும்பம், அதில் வாரிசு சண்டை, ஒருவரை ஒருவர் அடித்து கொல்கிறார்கள். யாரிடமும் நேர்மை இல்லை, பாசம் இல்லை, பதவி, பணம் தான் பெரிதாகத் தெரிகிறது. இதை நாயகன் படத்தைக் கொடுத்த மணிரத்னமா இது என்று ஆச்சரியப்பட வைக்கிறார்.

Also Read: பருத்திவீரனுக்கு பின் தொடர் மொக்கை வாங்கிய கார்த்தியின் 5 படங்கள்.. வந்தியத்தேவனை வச்சு செய்த மணிரத்தினம்

Trending News