செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அட்டைப்பூச்சி போல ஒட்டிக்கொண்டே திரியும் யாஷிகா.. காதல் மயக்கத்தில் இருக்கும் அஜித் மச்சானின் புகைப்படம்

கவர்ச்சி நாயகியாக வலம் வரும் யாஷிகா சந்திக்காத பிரச்சனைகளே கிடையாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத்துடன் காதல், கார் விபத்து, தோழியின் மரணம் என்று பல்வேறு சர்ச்சைகளில் இவர் சிக்கினார். இருப்பினும் அதையெல்லாம் கடந்து வந்த இவர் எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அப்போதே இருவருக்கும் காதல், விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என பல கிசுகிசுக்கள் வெளிவந்தது. இந்நிலையில் இப்போது அவர் அஜித் மச்சானான ரிச்சர்ட் ரிஷியுடன் நெருக்கமாக பழகி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஏற்கனவே ரிஷி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் யாஷிகாவுடன் இணைந்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார்.

Also read: 5 கோடி கடன் இருந்த போதும் அப்படி நடிக்க மாட்டேன்.. வீடு தேடி வந்த 2 கோடி பணத்தை தூக்கி எறிந்த அஜித்

அதில் இந்த ஜோடி மிகவும் நெருக்கமாகவும், முத்தம் கொடுப்பது போலவும் பல போட்டோக்கள் இருந்தது. அதை பார்த்த ரசிகர்கள் ஏதாவது பட ப்ரமோஷன் ஆக இருக்கும் என்று கண்டுக்காமல் இருந்தனர். ஆனால் ரிஷி அடுத்தடுத்து யாசிகாவுடன் இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இதன் மூலம் இவர்கள் இருவரும் காதலில் விழுந்துள்ளது நன்றாக தெரிகிறது. அதிலும் இந்த ஜோடி இப்போது ஜாலியாக வெளியூர் ட்ரிப் சென்றுள்ளனர். அது சம்பந்தப்பட்ட போட்டோக்களை தான் ரிஷி அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அவை அனைத்திலும் யாஷிகா அவரை அட்டைப்பூச்சி போல் ஒட்டிக் கொண்டே இருக்கிறார்.

Also read: அப்பா பைக் ரேஸ் போல ஆச்சரியப்படுத்திய அஜித்தின் மகன்.. வைரல் புகைப்படம்

தற்போது வெளியாகி இருக்கும் ஒரு போட்டோவில் கூட யாஷிகா ரிஷியின் மேல் நன்றாக ஒட்டிக்கொண்டு அவர் கையை பிடித்தபடி அமர்ந்திருக்கிறார். அதில் காருக்காக நாங்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்ற வாசகமும் இடம்பெற்று இருக்கிறது. இந்த போட்டோ தான் தற்போது அதிக கமெண்ட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறது.

அதாவது நீங்கள் இருவரும் உண்மையிலேயே காதல் செய்கிறீர்களா, இது கல்யாணம் வரை செல்லுமா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அஜித் மச்சானுக்கு யாஷிகா மீது இப்படி ஒரு காதல் மயக்கமா என்று சிலர் கேலியும் பேசி வருகின்றனர். அந்த வகையில் ஏகப்பட்ட பாய் பிரண்டுகளை மாற்றிய யாஷிகா இவரையாவது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அட்டைப்பூச்சி போல ஒட்டிக்கொண்டே திரியும் யாஷிகா

richard- rishi-yashika
richard- rishi-yashika

Also read: பல கெட்டப்பில் வெற்றி கண்ட 5 நடிகர்கள்.. இன்றுவரை அஜித் பெயரை காப்பாற்றும் மாஸ் கதாபாத்திரம்

Trending News