பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.. பயில்வானை கொத்து பரோட்டா போட்ட நடிகர்

பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் திரைப்படங்களில் நடித்து அடைந்த புகழை விட சோசியல் மீடியா மூலம் தான் அதிக பிரபலமாகி இருக்கிறார். ஆனால் இதுவே அவருக்கு பல சமயங்களில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது. அப்படித்தான் தற்போது நடிகர் ஒருவரும் இவரை சரமாரியாக கேள்வி கேட்டு வறுத்தெடுத்திருக்கிறார்.

அதாவது பயில்வான் சமீபத்தில் வடிவேலுவை பற்றி பல தகவல்களை வெளியிட்டு இருந்தார் எப்போதுமே நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயத்தை கூறுவது தான் இவருடைய வழக்கம் அப்படித்தான் வடிவேலு 8 மணி ஆகிவிட்டாலே படப்பிடிப்பு தளத்தை விட்டு கிளம்பி விடுவார். தன்னுடன் நடிகைகளை அழைத்துச் செல்லும் அவர் நேராக பண்ணை வீட்டுக்கு சென்று விடிய விடிய அங்கு தான் இருப்பார் என கூறியிருந்தார்.

மேலும் பல விஷயங்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒரு சேர கிடைத்தது. அந்த வகையில் நடிகர் டெலிபோன் ராஜ் இந்த விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக முன் வைத்துள்ளார். இவர் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் என்று இவர் சொல்லும் காமெடி அதிக பிரபலம் ஆனது.

இப்படி பல படங்களில் நடித்திருக்கும் இவர் பயில்வான் பற்றிய சில விஷயங்களை தெரிவித்து இருக்கிறார். அதாவது வடிவேலு யாரை பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு போனால் இவருக்கு என்ன, அவரால் முடிகிறது போகிறார். இவரால் யாரையும் அழைத்துச் செல்ல முடியவில்லை என்ற ஆதங்கத்தில் இப்படி பேசுகிறாரா என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பயில்வானுக்கு இப்போது வயதாகி விட்டது. முன்பு போல் அவரால் எந்த படத்திலும் நடிக்க முடியாது. வசனங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. அதனாலேயே இப்படி சில சேனல்களில் தேவையில்லாத விஷயங்களை பேசி காசு சம்பாதித்து வருகிறார் என்று அவரை கொத்து பரோட்டா போட்டுள்ளார். ஏற்கனவே இப்படி ஒரு கருத்து ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அதாவது உண்மை தன்மை என்ன என்று ஆராயாமல் பயில்வான் ஸ்கிரிப்ட்டை பார்த்து படிப்பது போல நடந்து கொள்கிறார். அதிலும் சமீப காலமாக அவர் கூறும் விஷயங்கள் நம்பும்படியாக இல்லை. அதனாலயே அவருக்கான ரசிகர்கள் பட்டமும் இப்போது குறைந்து போயிருக்கிறது. இந்நிலையில் டெலிபோன் ராஜ் பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான், உனக்கு என்ன, என்ற ரீதியில் பயில்வானை வெளுத்து எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.